Announcement

Collapse
No announcement yet.

பாட்டி வைத்தியம் - சூட்டில் சளி பிடித்தல்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பாட்டி வைத்தியம் - சூட்டில் சளி பிடித்தல்

    சூட்டில் சளி பிடித்தால் என்ன செய்யனும்?

    முதலில் எப்படி கண்டுபிடிப்பது ? கண்ணு எரியும், தொண்டை கர கரக்கும், தலை இல் எண்ணை வைத்து அழுந்த தேத்தால சூடு பறக்கும், வறட்டு இருமல் இருக்கும், சில சமையம் அடி வயிறு வலிக்கும், 'ஒன்றுக்கு' போனால் எரியும் அல்லது கொஞ்சமாக நீர் கடுப்புபோல் அளவு குறைவாக போகும் .


    அப்படி இருந்தால், செய்ய வேண்டியவை, நல்ல எண்ணை தேய்த்து குளிக்கணும், நிறைய மோர் குடிக்கணும், தயிர் சாதம் நரத்தங்கை தொட்டுண்டு சாப்பிடணும், இஞ்சி டீ குடிக்கலாம், சோம்பு ஜலம் குடிக்கலாம், பனங்கல்கண்டு ஜலம் குடிக்கலாம்,
    பனம் வெல்லத்தில் ஏதாவது பண்ணி சாப்பிடலாம். ஆக மொத்தத்தில் குளுமைக்கு சாப்பிடணும்.


    எல்லாத்தைவிட ரொம்ப ரொம்ப சிறந்த து, வாழைப்பழ மில்க் ஷேக் அது குடித்தால் ஒரே வேளை இல் சரியாகிவிடும்.


    சேர்க்க வேண்டிய காய்கறிகள், பூசணி, சௌ சௌ , பரங்கி, சூறை போன்ற நீர் காய்கறிகள், வெந்தயம் , வெந்தய கீரை போன்றவை , பசும்பால் .
    Last edited by krishnaamma; 29-03-17, 12:19.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: பாட்டி வைத்தியம் - வாழைப்பழ மில்க் ஷேக் !

    தேவையானவை:

    நல்ல கனிந்த வாழைப்பழம் 2 (பொதுவாக கற்பூர வாழை ரொம்ப குளுமை அது கிடைத்தால் ரொம்ப நல்லது )
    பால் 1 கப்
    சக்கரை தேவையான அளவு
    தேவைப்பட்டால் ஏலப்பொடி அல்லது எசன்ஸ்

    செய்முறை:

    எல்லாவற்றையும் மிக்ஸில போட்டு அடிக்கவேண்டியது தான்.
    உடனே குடிக்க வேண்டியது தான்

    குறிப்பு: வாழை பழத்தை தோல் நிக்கி விட்டு அறையுங்கள்
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: பாட்டி வைத்தியம் - சோம்பு ஜலம் !

      தேவையானவை:

      சோம்பு 2 டேபிள் ஸ்பூன்
      நெய் 2 ஸ்பூன்
      4 டம்ளர் தண்ணீர்
      பனம் கல்கண்டு 2 டேபிள் ஸ்பூன்

      செய்முறை:

      ஒரு வாணலி இல் சோமபை சுத்தம் செய்து போடவும்.
      1 ஸ்பூன் நெய் விட்டு பொன் வறுவலாக வறுக்கவும் .
      நல்ல மணம் வரும், அப்ப 4 டம்ளர் தண்ணீரையும் விடவும்
      அடுப்பை நிதானமாக எரியாவிடவும்
      அது கொதித்து கொதித்து 1 1/2 டம்ளராக ஆனதும் பனம் கல்கண்டை போடவும்.
      மீண்டும் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.
      கொஞ்சம் ஆறினதும் வடிகட்டி , மீதி நெய் சேர்த்து பருகவும்.

      குறிப்பு: நெய் சோம்பு ஜலத்தில் விட்டதும் உருகனும், அந்த அள்வுக்காவது சூடு இருக்கணும்.
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #4
        Re: பாட்டி வைத்தியம் !

        சோம்பு பிடிக்காத வா இதை குடிக்கலாம்

        தேவையானவை:


        நெய் 2 ஸ்பூன்
        4 டம்ளர் தண்ணீர்
        பனம் கல்கண்டு 3 டேபிள் ஸ்பூன்

        செய்முறை:

        ஒரு வாணலி இல் 4 டம்ளர் தண்ணீரை விடவும்
        பனம் கல்கண்டை போடவும்
        அது கொதித்து கொதித்து 1 1/2 டம்ளராக ஆனதும் .
        அடுப்பை அணைக்கவும்.
        கொஞ்சம் ஆறினதும் வடிகட்டி , மீதி நெய் சேர்த்து பருகவும்.

        குறிப்பு: நெய் ஜலத்தில் விட்டதும் உருகனும், அந்த அள்வுக்காவது சூடு இருக்கணும்.


        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #5
          Re: பாட்டி வைத்தியம் - இஞ்சி டீ !

          இஞ்சி டீ - இது ரொம்ப சுலபம்

          தேவையானவை :

          1 டீ ஸ்பூன் டீ
          1/2 ஸ்பூன் துருவின இஞ்சி
          சர்க்கரை
          பால்

          செய்முறை:

          ஒரு வால் பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் .
          அது கொதிக்கும் போது டீ யை போடவும்.
          2 நிமிடம் கழித்து துருவின இஞ்சி போடவும்.
          மீண்டும் நன்கு கொதித்ததும் பாலை விட்டு ஒரு கொதி வந்ததும் தம்ளரில் டீ வடிகட்டியால் , வடிகட்டவும்.
          சர்க்கரை சேர்க்கவும் .
          அற்புதமாக இருக்கும்.
          மழை காலங்களில் சாதாரணமாக கூட இதை குடிக்கலாம்.

          குறிப்பு: சிலர் பாலில் டீ போடுவார்கள், இதில் துருவின இஞ்சி போடுவதால் சில சமயம் கசக்க வாய்ப்புண்டு அதனால் கடைசி இல் விட்டால் போதுமானது.
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment

          Working...
          X