Announcement

Collapse
No announcement yet.

கோபம் ஒரு நோய் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கோபம் ஒரு நோய் !

    கோபம் ஒரு நோய் !

    *பலருக்கும் தெரியாத உண்மை இது. கோபம் என்பது பழக்கம் அல்ல. அது ஒரு நோய். சிலருக்கு கோபமே அவர்களின் வாழ்வியல் அங்கமாகிவிட்டிருக்கிறது. சமூகத்தில் அன்பானவர், புத்திசாலி, கறார் பேர்வழி, கஞ்சப் பிசினாரி, சபலக்காரர் என்கிற வரிசையில் கோபக்காரர்களும் மிக அதிகமாகவே இருக்கிறார்கள். இளம் வயதிலேயே இதற்குத் தீர்வு கானாவிட்டால் இவர்கள் ஆயுட்காலக் கோப நோயாளிகளாகிவிடுவர்.


    *கோபம் அதிகரிக்க அதிகரிக்க ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டத்தின் வீச்சு அதிகரிக்கிறது. அப்போது அக்குழாய்களின் உட்பகுதி தசைகளில் நுண்ணிய கிழிசல்கள் ( Micro teams) ஏற்படுகின்றன. இது தொடர்ந்தால் இதயத் தாக்குதல், பக்கவாதம் நோய்களுக்கு அதிக வாய்ப்பு உண்டு.


    * ஏற்கனவே இதயத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து கோபப்படுவதால் இதயத்தில் ரத்தத்தை பீய்ச்சும் திறன்
    ( Pumping efficiency) பாதிக்கப்படுகிறது.


    -- டி.எஸ்.சஞ்சீவிகுமார். டாக்டர் மோகன் வெங்கடாசலபதி. ( உணர்ச்சிகள் ). வாழ்வு இனிது. ரசித்து வாழ வேண்டும்.
    -- ' தி இந்து ' நாளிதழ். சனி, டிசம்பர் 21, 2013.
Working...
X