வேர்க்கடலை தோசை
தேவையானவை: கடலை மாவு ஒரு கப், கம்பு மாவு அரை கப், உளுந்து மாவு ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி, வெங்காயம் 1, மோர் 150 மி.லி, உப்பு தேவையான அளவு, வேர்க்கடலை ஒரு கப், வரமிளகாய் 1, பூண்டு 2 பல், வெண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையை வறுத்து, பூண்டு மற்றும் வரமிளகாயைச் சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும். மூன்று மாவுகளையும் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழைபோட்டு, மோர் ஊற்றி, தோசை மாவு பதத்துக்குத் தேவையான தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். மெல்லிய தோசைகளாக வார்த்துஎடுத்து, அதன் மேல் சிறிதளவு வெண்ணெய் தடவி, வேர்க்கடலைப் பொடி தூவிப் பரிமாறவும்.
பலன்கள்: குழந்தைகளுக்குத் தேவையான ஆற்றல், புரதச்சத்துகள் கிடைக்கின்றன. வெண்ணெயின் மூலம் வைட்டமின் ஏ மற்றும் தேவையான கொழுப்புச் சத்தும் கிடைக்கின்றன.
Courtesy;Dr.Vikadan