Announcement

Collapse
No announcement yet.

Tips to Protect you eyes & beauty

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tips to Protect you eyes & beauty

    கண்களின் தான் முகத்தின் அழகை எடுத்துக்காட்டும் கண்ணாடி. ஆரோக்கியமான கண்களே அழகான கண்கள். எனவே கண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். கண்கள் சிவந்துபோதல், மேக் அப் அலர்ஜியால் கண்கள் பாதிக்கப்படுதல், காண்டாக்ட் லென்ஸ், சன்ஸ்கிரீன் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
    கண்களுக்கு தனி கவனம் செலுத்தி மேக் அப் போடுவதால் கண்களின் அழகு அதிகரிக்கும். முகத்திற்கும் தனி பொலிவு கிடைக்கும். கண்களுக்கு போடும் மேக்அப் சாதனங்களை சரியானதாக தேர்வு செய்யவேண்டும். கண்மை, ஐ லைனர், ஐ ஷேடோ போன்றவை தரம் வாய்ந்தவையாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அலர்ஜியினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.




    கண்களுக்கு போடும் மேக் அப் கலர் சரியானதாக இருக்கவேண்டும். உங்களுடைய ஸ்கின் டோனுக்கு ஏற்ற சரியான கலரை தேர்ந்தெடுத்து போடவேண்டியது அவசியம். கண்களின் வடிவத்திற்கு ஏற்ப கவனம் செலுத்தி மேக் அப் போடவேண்டும். அப்பொழுதுதான் சரியான அளவில் அழகாய் மேக் அப் போடமுடியும்.

    தரமான மேக் அப்
    கண்களுக்கு இரவில் திக்காகவும், பகல் நேரத்தில் லைட்டாகவும் மேக் அப் போடவேண்டும். அப்பொழுதுதான் இயற்கையான ஒரு லுக் கிடைக்கும். கண்கள் மென்மையானவை அவற்றிற்கு தனி கவனம் செலுத்தி மேக் அப் போடவேண்டும். லேட்டஸ்ட் மேக் அப் போடுவதன் இளமையாக, ஸ்டைலாக காணப்படுவீர்கள்.
    முதலில் நல்ல தரமான பவுண்டேஷன் தடவ வேண்டும். பிறகு விருப்பமான நிறத்தில் ஐ ஷேடோ தடவ வேண்டும். காலை வேளைகளில் லைட்டான ஷேடுகளிலும் மாலை மற்றும் இரவு வேலைகளில் டார்க் நிறங்களையும் உபயோகிக்கலாம். பிறகு ஐ லைனர் தடவ வேண்டும். இப்போதெல்லாம் திக்காக ஐ லைனர் தடவுவதுதான் பேஷன். சிறிய கண்களாக இருந்தால் ரொம்பவும் திக்காகப் போட வேண்டாம். கீழ் பாகத்தில் முழுவதுமாக ஐ லைனர் தடவ வேண்டாம்.

    பிறகு மஸ்காரா, காலை வேளைகளில் ஒரு கோட்டும் மாலை வேளைகளில் இரண்டு மூன்று கோட்டுகளும் தடவலாம். மஸ்காராவிலேயே இப்போது பிரவுன் நீலம் மாதிரி நிறங்கள் கூட வந்துவிட்டன. விருப்பமுள்ளோர் அவற்றையும் தடவிப் பார்க்கலாம். கடைசியாக காஜல் அதாவது கண் மை. இது கண்களுக்குள்ளே போகக் கூடியது என்பதால் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம்.

    மேக் அப் கலைக்க
    கண்களில் போடப்பட்ட மேக்கப்போடு இரவு தூங்கக் கூடாது. அதை அகற்றி விட்டே தூங்கச் செல்ல வேண்டும். தினசரி இரவு தூங்கும் முன்பாகக் கண்களுக்குள் ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டால் காலையில் கண்கள் பளிச்சென்று இருக்கும்.
    கண்களின் மேக் அப் கலைக்கும் போது சோப், சோப் ஆயில் பயன்படுத்தவது கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே அதற்கென உள்ள கிளன்சர்ஸ் பயன்படுத்திதான் மேக் அப் கலைக்கவேண்டும். இரவு உறங்கும் முன் கண்டிப்பாக கண்களின் மேக் அப் கலைத்துவிட்டுதான் உறங்கவேண்டும்.

    கருவளையம் போக்க
    கண்களின் கீழ் கருவளையம் வருவதற்கு காரணம் தூக்கம் இன்மை, ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. தண்ணீர் அதிகமாக குடிக்காமல் இருப்பதாலும், அதிகமாக டி.வி. பார்ப்பது, இவை எல்லாம் காரணம் ஆகிறது. கருவளையம் வராமல் தடுக்க, குறைந்தது 8 மணி நேரம் நன்றாக உறங்கவேண்டும். தூங்கும் போது எந்த விதமான மன உளைச்சல்களும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    கண்களுக்கு புத்துணர்ச்சி
    உறங்கும் முன் சூடான பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும். மனதையும், உடலையும் டென்ஷன் ஆக வைத்துக் கொள்ளாமல் ரிலாக்சாக இபேருப்பதும், நல்ல தூக்கத்திற்கு வழி செய்யும். வெள்ளரிகாய், உருளைகிழக்கு, தக்காளி ஆகியவற்றை மெலிதாக கட் செய்து கண்களுக்கு மேல் வைக்கவும், இதனால் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
    வெள்ளை சாமந்திப் பூவின் இதழ்களைப் பிய்த்து அதை வெந்நீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு கருவளையங்களை போக்கும்.

    கண்களின் அழகிற்கு
    வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பால், பால்பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கள். அதோடு போதிய அளவு தண்ணீர் குடிக்கவேண்டியதும் மிக முக்கியம்.
Working...
X