ஒரு சிறிய கதை.
ஒருவர் ஆசையோடு வளர்த்த மான் காணாமல் போனதால் ரொம்பக் கலங்கிப் போனார். அவர் கலக்கத்தைக் கண்டு மனம் இரங்கி இறைவன் அவர் முன் தோன்றி, வேண்டிய வரத்தைக் கேட்கச் சொன்னார்.
அவர், ' என் மான் காணாமல்போக யார் காரணமோ, அவர் என் கண் முன் வர வேண்டும். என் கையால் அவருக்கு நானே தண்டனை தர வேண்டும் என்றதும் இறைவன் அதிர்ந்துபோனார். பின்பு தயங்கி, ' அது வேண்டாம் பக்தனே...' என்று இழுத்தார். பக்தன் கோபமுற்று, ' இறைவா... ஒரு பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்றாமல் போவதற்குப் பெயர் வரமா? " என்று கேட்டார்.
' பக்தா...நன்றாக யோசித்துத்தான் கேட்கிறாயா...? ' என்ற இறைவனைப் பார்த்து, ' ஆமாம்... நன்றாக யோசித்த பின்பே கேட்கிறேன். முடியுமா..முடியாதா? ' என பிடிவாதமாக கேட்க, இறைவன் சலித்துப்போய், ' சரி...வேறு வழி இல்லை. உன் மானைக் கொண்டுபோன உயிரினம் உன் முன் நிற்கக் கடவது ' என்று கூறி மறைந்தார்.
பக்தன் முன் தோன்றியது... ஒரு சிங்கம்.
பக்தன் அலறினான், அலறி என்ன செய்ய?"
-- உ.அனந்த கோபால், கரூர். நானே கேள்வி...நானே பதில்!
-- ஆனந்த விகடன். 22 - 8 - 2012.
Posted by க. சந்தானம்