Announcement

Collapse
No announcement yet.

மனைவி எதிர்பார்க்கும் விசயங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மனைவி எதிர்பார்க்கும் விசயங்கள்

    ஒரு மனைவி, தன் கணவனிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள்….? விதவிதமான பட்டுப்புடவைகளா? தங்கம், வைரம் என்று நகைக் குவியலா? பெரிய பங்களா, ஏ.சி.கார் என்று ஆடம்பர விஷயங்களா….? நிறைய சம்பளமும், ஏகப்பட்ட பேங்க் பேலன்ஸும் வேண்டுமென்றா? அல்லது தன் கணவன் மன்மதன் போல் அழகாக இருக்க வேண்டுமென்றா?
    இல்லவே இல்லை…! மனைவியின் எதிர்பார்ப்பே வேறு விதமானது. அவள் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள் என்று கணவன் தெரிந்து கொண்டாலே அவர்களுடைய இல்லற வாழ்க்கை இன்னும் அன்னியோன்யம் கூடியதாக அமையும்!

    கணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்க்கும் விசயங்கள் இவை தான்
    ஆண்களே… உங்கள் மனைவியைப் புரிந்துகொள்ள இதைப் படியுங்கள்….

    அன்பாகப் பிரியமாக இருங்கள்… அதுவே ஆயிரக்கணக்கான மதிப்புள்ள புடவைகள் தராத மகிழ்ச்சியைத் தரும்!.
    மனது புண்படும்படி பேசாதீர்கள். அது உங்கள் மனைவிக்கு உங்கள் மேல் உள்ள பிரியத்தைக் கூடச் சில சமயங்களில் குறைத்துவிடக் கூடும். அது போல அடிக்கடி கோபப்படவும் செய்யாதீர்கள்.
    சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. பல கணவன்மார்கள் இதைத்தான் பெரிய கடமையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். உப்பு அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், இன்னிக்கி சமையல் சூப்பரா இருக்கு என்று முதலில் பாராட்டிவிடுங்கள். அப்புறம் மெதுவாக கொஞ்சம் உப்பைக் குறைச்சு போட்டிருக்கலாம் என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் மனைவி விஷயத்தைப் புரிந்து கொண்டு அடுத்த முறை இன்னும் சூப்பராக சமைப்பார்!
    எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்கொடுக்கக் கூடாது. பலர் முன்னிலையில் திட்டவோ, மரியாதைக் குறைவாகவோ பேசாதீர்கள். இது உங்கள் அன்யோன்யத்தைக் குறைத்துவிடும்.
    உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு மனைவியுடன் செல்லுங்கள். அது மனைவிக்கு நீங்கள் மரியாதை கொடுப்பதாகத் தோன்றச் செய்யும்.
    எந்த ஒரு விஷயத்தையும் மனைவியுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
    மனைவி சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள். காதுக்கு வைரத்தோடு வாங்கித் தருவதைவிட சந்தோஷம் தரும் விஷயம் இது.
    மனைவியிடம் மனம்விட்டுப் பேசுங்கள். நிறைய விஷயங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
    மனைவி வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசித்துப் பாராட்டுங்கள்.
    மாதம் ஒரு முறையாவது வெளியில் கூட்டிக் கொண்டு போங்கள். உங்கள் பேரிலுள்ள கோபம்கூட ஓடி விடும்.
    பிள்ளைகள் படிப்பில் அக்கறை கொண்டு உதவி செய்யுங்கள். அப்படிச் செய்தால் மனைவிக்கு இன்னும் உங்கள் மீதுள்ள காதலை அதிகப்படுத்தும்.
    இரவு விழித்து அழும் குழந்தையைப் பார்ப்பதில் உங்களுக்கு இருக்கும் அதே கஷ்டம் போலத்தான் உங்கள் மனைவிக்கும் இருக்கும். எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தும்.
    மனைவி உடல்நலம் இல்லாமல் இருக்கும் பொழுது அக்கறையுடன் உடன் இருந்து கவனியுங்கள். அவளுடைய சின்னச்சின்ன தேவைகளைப் பூர்த்தி செய்து சிறு சிறு உதவிகள் செய்தாலே அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.
    அம்மாவிடம் காட்டும் பாசத்தை மனைவியிடமும் காட்டுங்கள். தாயளவுக்கு தாரமும் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்தான்!
    எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டே கிளம்புங்கள். குடும்பத்தில் பல குழப்பங்களைத் தடுக்க இது உதவும்.
    மனைவியின் பிறந்த நாளை அவரைக் கேட்காமலேயே தெரிந்து வைத்துக் கொண்டு கட்டாயம் ஏதாவது சிறு பரிசாவது வாங்கிக் கொடுங்கள். அல்லது அவளுக்கு எது பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு அதை இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தும் பரிசாகக் கொடுக்கலாம்.
    ரொம்ப முக்கியமான விஷயம் இது… மனைவியிடம் பொய் பேசாமல் இருங்கள்.
    கடைசியாக… கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் கணவனையே மனைவி கடவுள் தனக்குத் தந்த பெரும் வரமாக நினைப்பாள்.

  • #2
    Re: மனைவி எதிர்பார்க்கும் விசயங்கள்

    மிக்க சரி சகோதரி!

    Comment


    • #3
      Re: மனைவி எதிர்பார்க்கும் விசயங்கள்

      சரியா சொன்னிங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி

      Comment


      • #4
        Re: மனைவி எதிர்பார்க்கும் விசயங்கள்

        exactly what you said is 100% right. but in this kaliyug onlly husbands love money and not the wife this is what I learnt

        Comment


        • #5
          Re: மனைவி எதிர்பார்க்கும் விசயங்கள்

          Respected Madam
          Probably one more point you did not mention.that is sharing the household work together ( not only waking up in the night to look after their baby)[ most of the present day boys share household work with his wife; this mind set up comes when they live in a foreign country or live separately from their parents. Usually mothers do not like their son doing kitchen work with her daughter in law, but fathers never think so.
          Nowadays when both husband and wife go for work, it is important for husbands to share every household work with their wife.

          Comment


          • #6
            Re: மனைவி எதிர்பார்க்கும் விசயங்கள்

            மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

            Comment


            • #7
              Re: மனைவி எதிர்பார்க்கும் விசயங்கள்

              Why not the other way? Good Husband is gift from God.

              Comment

              Working...
              X