ஶ்ரீ:
தமிழ்ப்புத்தாண்டை இவ்வளவு விமரிசையாக கொண்டாடுவதில்லையே என்கிற ஆதங்கத்தில் சிலர், ஆங்கிலப் புத்தாண்டை நிந்தித்து எழுதுகிறார்கள்.
அவர்கள் ஆதங்கத்தில் நிறை நியாயம் இருக்கிறது - ஆனால்,
நிந்தனையில்தான் நியாயம் இல்லை.
ஏனெனில் நிந்திப்பவர்கள் உட்பட எவருக்கும் இன்றைய தமிழ் தேதி என்ன என்று கேட்டால் ஆங்கிலத் தேதியைக் கூறும் அளவிற்கு, சரியாகவும், தயக்கமின்றியும் கூற இயலாது. அது நம்முடன் அவ்வளவு ஊறி, உறைந்துபோய்விட்டது.
இதைவிட முக்கியமானது, நேரம், தமிழில் நேரம் சொல்ல வேண்டுமானால் நாழிகையில்தான் சொல்லவேண்டும், நாழிகையை மணியாக மாற்றாமல் அப்படியே நேரத்தை உணர்ந்துகொள்ளக்கூடிய ஒரு சதவீதம்பேர்கூட தற்போது இல்லை.
தமிழைக் கடந்து, இந்தியாவைக் கடந்து, உலகில் உள்ள அனைவருடனும் ஒவ்வொரு நாளும் பழகுவதும், பணியாற்றுவதும் காலத்தின் கட்டாயம் என்றாகிவிட்ட காலக்கட்டத்தில் :
பாரம்பர்யத்தை விட்டுவிடாமல் நம்மைப் பராமரித்துக்கொண்டு, உலகியல் மாற்றங்களோடு இயைந்து செயல்படுவதே சிறப்பு.
-என்.வி.எஸ்

Comment