Re: Wish you all a very very Happy New Year - 2014!
BMBCஅண்ணா,
அனைவர்க்கும் எனது 2014 புது வருட வாழ்த்துக்கள்.
வேதம் என்றால் என்ன என்றே தெரியாத ஒரு பிராமணனாக என் வாழ்க்கையின் பாதிக்கு மேல் மிலிடரியில் கழித்து தற்போது தங்களுடைய network வசதியினால் ருத்ரம் புருஷ சூக்தம் சொல்லி ருத்ராபிஷேகமும் பஞ்ச யதன பூஜையும் தினமும் செய்து வருகிறேன் என்றால் அது மிகையாகாது.
காலையில் news paper படிக்கவில்லை என்றால் கூட இந்த ப்ராமண network பார்க்காமல் நான் விடுவதில்லை. அவ்வளவு தூரம் ஈடுபாட்டோடு இருந்த எனக்கு கடந்த ஒரு மாதமாக சிறு ஏமாற்றம். இப்போதெல்லாம் மூன்றே மூன்று விஷயங்கள்தாம் மாற்றி மாற்றி என் ஊன கண்களுக்கு பட்டு கொண்டு இருக்கிறது. BMBC BIRTHDAY WISHES, திருவேங்கடத்து மாலை, திருவரங்கத்து மாலை....... அவ்வளவுதான். எத்தனையோ நல்ல விஷய பரிமாற்றம் அப்படியே நின்று போய் விட்டது. என்னை போன்ற ஒன்றுமே தெரியாதவர்களுக்கும் தெரிந்து கொள்ள விரும்புபவர்க்கும் இது பெரிய ஏமாற்றம்தானே அண்ணா.?
நல்ல வழி பிறக்க தாங்கள்தான் ஆவன செய்ய வேண்டும்.
Re: Wish you all a very very Happy New Year - 2014!
ஶ்ரீ:
அன்புச் சகோதரர் திரு.ராதாக்ருஷ்ணன் அவர்களுக்கு,
தனிப்பட்ட விசேஷமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தங்கள் ஆதங்கம் புரிகிறது.
நாம் என்ன செய்ய இயலும்? விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது அவரவர் விருப்பம்.
நாம் யாரையும் வற்புறுத்த இயலாது.
அதே சமயம் நம் கொள்கைகளையும் நாம் விட்டுத்தர இயலாது.
திருப்பதி மலையில் கூட சில சமயம் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்.
அவன் திருவுள்ளம் எப்படியோ அப்படி நடக்கட்டும்.
கவலைப்டவேண்டாம் விரைவில் நான் நிறைய விஷயங்களை எழுதி வெளியிடுகிறேன்.
பஞ்சாங்கம் தயாரித்தல், கல்லூரி வேலைகள், வைதீக வேலைகள், குடும்ப வேலைகள் போன்ற
சில வேலைப்பளுக்கள் விரைவில் ஒரு முடிவுக்கு வர இருக்கின்றன.
நன்றி,
என்.வி.எஸ்
Re: Wish you all a very very Happy New Year - 2014!
Respected Sri NVS.,
Namaskaram,
Greetings and Good Wishes for a Happy New Year 2014.
May the blessings of the Lord be with us to lead a contented life of good health
and happiness.
Comment