Announcement

Collapse
No announcement yet.

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

    நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

    அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?

    ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?

    அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள்.

    அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.

    18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

    அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.

    மேலு*ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

    நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!

    இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!

    நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

    whatsup
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

    சாண வறட்டி விற்பனை: 'ஆன்லைனில்' அமோகம்!

    நம் கிராமங்களில் பயன்பாட்டில் இருந்து, மறைந்து போன சாண வறட்டிக்கு, வெளிநாடுகளில் அமோக வரவேற்பு கிடைத்துஉள்ளது. 'ஆன்லைன்' விற்பனையிலும் கொடி கட்டிப் பறக்கிறது.
    இந்தியாவில், அடுப்பு எரிக்க விறகுக்கு அடுத்தபடியாக, மாட்டுச் சாணத்தில் தயாரான வறட்டிகள், அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. வீட்டில் மாடு வளர்க்காதவர்கள், அவற்றை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

    ஆனால், காஸ் சிலிண்டர் அறிமுகமான பிறகு, வறட்டியின் பயன்பாடு, படிப்படியாக குறைந்து, இப்போது மறைந்தே போய் விட்டது. யாகங்கள், ஹோமங்களுக்கு மட்டுமே இப்போது வறட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.அதேபோல், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இப்போது, வறட்டி பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஆன்லைன் மூலம் வறட்டி வாங்கி உபயோகிக்கின்றனர்.

    வெளிநாடுகளில் வசித்தாலும், மரபுகளை பின்பற்றிவரும் பலர், பூஜை, ஹோமம் போன்றவற்றை நடத்துகின்றனர். அவர்களின் தேவையை உணர்ந்த, ஆன்லைன் வர்த்தக இணைய தளங்கள் சில, வறட்டிகளை விற்பனை செய்ய துவங்கியுள்ளன.இதை பார்த்த நமது ஊர் மக்களும், ஆன்லைனில் வறட்டிகளை ஆர்டர் செய்யத் துவங்கியுள்ளனர். நான்கு வறட்டிகள், 40 ரூபாய்க்கு விற்கப்டுகின்றன. இதை, ஏராளமானோர் விரும்பி வாங்குகின்றனர்.

    அமெரிக்காவில் இருந்து இயங்கும், 'அமேசான்.காம்' வர்த்தக இணைய தளம், இதை வெளிநாட்டில் சப்ளை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.இதைப் பார்த்து, இந்திய இணைய தளங்களும், வறட்டி விற்பனையில் களம் இறங்கியுள்ளது. cowdungcake sale என்று, டைப் செய்து, இணையத்தில் தேடினால், விற்பனை செய்யும் இணைய தளங்களை கண்டறிந்து, வறட்டிகளை வாங்கலாம்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!



      இப்போது இதுவும் விலை ஏறி விட்டது 199 ரூபாய் என்று நினைக்கிறேன்
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment

      Working...
      X