அரசியலில் யாரும் நியாயமாக நடந்து கொள்ள மாட்டார்களா ?
--- அரசு பதில்கள் . குமுதம் 22 . 9 . 2010 .
ஒரு பிரபலமான எழுத்தாளர் வீட்டுக்கு ஒரு அரசியல் தலைவரின் நெருங்கிய உறவினர் வந்தார் . தேர்தல் நேரம் . அந்த அரசியல் தலைவர் தேர்தலில் நிற்கிறார் தேர்தல் செலவுக்கு அவசரமாய் இரண்டுலட்ச ரூபாய் தேவைப்படுகிறது கொடுத்து உதவ முடியுமா ? என்று கேட்கிறார், அந்த உறவினர் . எழுத்தாளரும் இரண்டு லட்ச ரூபாய் கொடுக்கிறார் . தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன . தேர்தலில் அந்தத் தலைவர் தோற்றுவிட்டார் . சில நாட்களில் எழுதாளர் வீட்டுக்கு அந்த அரசியல் தலைவரும் அவரது மனைவியும் வருகிறார்கள்
Information
அவசர நேரத்தில் பணம் கொடுத்து உதவியதற்கு நன்றி . ஆனால், அந்தப் பணத்தை நாங்கள் பயன்படுத்தவில்லை ' என்று சொல்லி தாங்கள் வாங்கிய இரண்டு லட்ச ரூபாயை திருப்பி தருகிறார்கள் . அந்தத் தலைவர் மன்மோகன்சிங் . பணம் கொடுத்து உதவிய எழுத்தாளர் குஷ்வந்த்சிங் . தனது சமீபத்திய புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார் கு.சி .
--- அரசு பதில்கள் . குமுதம் 22 . 9 . 2010 .