Announcement

Collapse
No announcement yet.

New Technology of Photography

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • New Technology of Photography

    Sri:
    New Technology of Photography to identify any single person from a large crown in millions.
    1. Flash player plug in required in your browser, user Google Chrome latest version.
    2. Wait for few seconds to load.
    3. Use the + button to maximize - zoom the photo to see the clear picture of any individual person.
    4. Post your comments without fail.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: New Technology of Photography

    bmbc admin அண்ணா,
    தாங்கள் இந்த ஸைட்டை ஆரம்பித்ததில் இருந்து தங்களை யாராவது இந்த கேள்வி கேட்டிருப்பார்களா; நான் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேனே என்று ஒரு பக்கம் தயக்கமாகவும் பயமாகவும் இருந்தாலும் கேட்டே விடுகிறேன். மன்னிக்கவும் ......
    தங்கள் புகைப்படம், தாங்கள் செய்யும் வைதீக தொழில் இவைகளுக்கும் தங்களுடைய தாங்கள் எழுதும் உயரிய சாஃப்ட்வேர் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் சம்பந்தமே இல்லையே...........! விபரமாக சொன்னால் பெருமைப்படுவேன்.......... சந்தோஷமும்படுவேன்........ please dont mistake me...

    Comment


    • #3
      Re: New Technology of Photography



      ஶ்ரீ:
      நன்றி திரு.ராதாக்ருஷ்ணன் அவர்களே,
      அடியேனைப் பொறுத்தவரை பர்சனல் என்று மறைப்பதற்கு எதுவுமே இருப்பதாக அடியேன் கருதவில்லை.
      அடிப்படையாக கல்லூரி வரையில் பயின்றிருந்ததாலும்,
      கல்லூரியில் படிக்கும்போதே, ப்ராமணர் சங்கத்தில் இணைந்து, ஒரு கிளையின் பொருளாளராக
      பணியாற்றிய அனுபவத்தினால் ஏற்பட்ட ஆர்வத்தினால், எதிர்காலத்தில் ப்ராமண சமூகத்திற்கு நம்மால் இயன்ற ஏதாவது ஸேவையினைச் செய்யவேண்டும் என்ற உள்ளக்கிடைக்கையினாலும்,
      31 வயது வரை லௌகீக வ்ருத்தியில் (structural engineering) பணியில் ஈடுபட்டு இருந்ததாலும்,
      எப்பணியிலும் தீவிர கவனத்தைச் செலுத்தி முயற்சிக்கும் குணத்தை எம்பெருமான் வழங்கியுள்ளதாலும்,
      வைதீகப் பணிகள் மதியம் 1 மணிக்குப் பிறகு எதுவும் இராது என்பதாலும்,
      விஞ்சிய நேரத்தை விரயம் செய்யாது, எதிர்காலத்தில் கணிணிதான் தகவல் தொடர்பில் முதன்மையிடம்
      வகிக்கும் என்று ஊகித்தறிந்து, 1990களிலிருந்து கணிணி ஸம்பந்தமான பெரும்பாலான தொழில்நுட்பங்களை, முறைப்படி அந்தந்த நிறுவனத்தின் மூலம் கற்றறிந்து,
      பெரும் தொகை செலவில் பத்து கம்ப்யூட்டர்களை வாங்கி ஒரு நிறுவனம் அமைத்து சுமார் 42 ப்ராமண
      மாணவர்களுக்கு அடியேன் கற்றதை கற்பித்ததால் ஏற்பட்ட அனுபவ அறிவினாலும்,
      தொடர்ந்து கிடைத்த நல்லோர்களின் கூட்டுறவாலும்
      இன்றளவும் தொடர்ந்து புதிய புதிய உக்திகளை கண்டு கற்கும் ஆர்வத்தினாலும்
      இப்படிப் பலப்பல காரணிகளினால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன்.

      யான் அறிந்தவற்றை யாவற்றையும் விருப்பம் உள்ளோர் அனைவருக்கும் பயிற்றுவிக்கவேண்டும்
      என்ற தணியாத ஆவலுடன் செயல்படுகிறேன்.
      நன்றி,
      என்.வி.எஸ்


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: New Technology of Photography

        மதிப்பிற்குரியவரே,
        தங்களுடைய தன்னடக்கம் என்னை வியக்க வைக்கிறது
        தங்களுடைய நல்ல குணங்களில் சிலவற்றையாவது எனக்கு அந்த பரந்தாமன் தரவில்லையே என என் மனம் ஏங்குகிறது.
        மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் என்னை அந்த பரந்தாமன் தங்களுக்கு சீடனாக படைக்கட்டும். மனம் மகிழ்வேன்.
        என்னவோ தெரியவில்லை, இன்று தங்களை புகழும் வாய்ப்பை எனக்கு அந்த ஆண்டவன் அருளியுள்ளான்.
        அவனுக்கும் தங்களுக்கும் நன்றி சொல்லி முடித்து கொள்ளும்
        அடியேன் ராதாகிருஷ்ணன்

        Comment


        • #5
          Re: New Technology of Photography

          ஶ்ரீ:
          திரு.ராதாக்ருஷ்ணன் அவர்களே,
          தங்களின் மனமார்ந்த பாராட்டுதல்களுக்கு நன்றி!

          புகழ்ச்சியை விரும்பாதவர்கள் யாரும் (பெரும்பாலும்) இருக்கமாட்டார்கள்.
          ஆயினும், அது தன்னடக்கத்தை துறந்து தற்பெருமை அடையச் செய்து, பின்
          தலைக்கர்வமாகவும் வ்யாபிக்க வாய்ப்பபுள்ளதால், அதைத் தவிர்க்கவேண்டும்
          என்று நீதி சாஸ்த்ரம் கூறுகிறது.

          அடியேனைப்போல பல நூறு மடங்கு பெரும் சாதனைகளை நிகழ்த்தியோர்
          வையகத்தில் நிறையபேர் உள்ளனர்.
          "எந்தரோ மஹாநுபாவுலு".
          அடியேன் ஸேவை சற்று சுயநலம் தழுவியதே.
          சிறு (18-25) வயதில் படிப்பிற்கும் (பி.யு.சி சேர ரூ 60 கட்டணம் செலுத்த 60 பேருக்கும் மேல்
          கையேந்தியிருக்கிறேன்), வேலைக்கும் (ப்ராமணன் என்பதால் வாய்பற்று) மிகுந்த சிரமப்பட்டபோது,
          நாம் முன்னேறினால் (முன்னேறிவிடுவோம் என்ற பெரும் நம்பிக்கை), நம் சமூகத்தைச் சேர்ந்த
          வாய்ப்பு, வசதியற்றவர்களுக்கு வலிந்து சென்று உதவியாக இருக்கவேண்டும் என்று தோன்றியது
          இது ஒரு விதத்தில் சுயநலம் சார்ந்தது அல்லவா?

          சில வருடங்களுக்கு முன்பு வரை, ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு (www.ahobilam.com) ஸேவை என்றிருந்த அடியேன், தற்போதுதான் சற்று பரந்த மனப்பான்மையுடன், (www.brahminsnet.com) ப்ராமண ஸேவைக்கு மாறியுள்ளேன்.
          பாராட்டுவதற்கும் ஒரு மிகப்பரந்த மனப்பான்மை வேண்டும்,
          தங்களைப்போன்றவர்களின் பாராட்டுதல் மேலும் வலுசேர்க்கிறது.
          மிக்க நன்றி.
          என்.வி.எஸ்


          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment


          • #6
            Re: New Technology of Photography

            ஸ்ரீமன்
            பிரமிப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை விடுபட்டால் அல்லவோ பாராட்ட ஸ்பெல் பவுண்ட் என்று சொல்வார்க்ளே அந்நிலைதான்

            Comment


            • #7
              Re: New Technology of Photography

              ஸ்ரீமன் நானும் கணிணி ஸம்பந்தமான தொழில்நுட்பங்களை, அறிய ஆவலாக உள்ளேன் உதவமுடியுமா?


              Comment


              • #8
                Re: New Technology of Photography

                ஶ்ரீ:

                கணினி ஸம்பந்தமான தொழில் நுட்பங்களை அறிய ஆவலாய் உள்ளது பற்றி மிக்க மகிழ்ச்சி.
                இதற்காக ஒரு தனி போரம் ஆரம்பத்தில் ஏற்படுத்தி இருந்தேன்.
                வரிசையாக பல பாடங்களையும் வீடியோ முறையில் இணைத்திருந்தேன்.
                அதற்கு அதிகம் ஆதரவு இன்மையால் அதை நிறுத்திவிட்டேன்.

                "கற்றலிற் கேட்டலே நன்று" என்று ஒரு பழமொழி உள்ளது அறிந்திருப்பீர்.
                நமக்கு அது மிக நன்றாகப் பொருந்தும்.

                காரணம்: நாம் இங்கே கற்பது அமெட்சூர் முறையில்,
                அதாவது மரபுசாரா வகையில், அதாவது, ஒரு முறையான கல்வி நிறுவனத்தின்,
                ஒரு முறைப்படுத்தப்பட்ட நேர அலகில்,
                ஒரு முறையான பாடத் திட்டத்தின் கீழ் பயிலாமல்,
                இணையம் வழியாக, நினைத்தபோது நினைத்ததை பயில முயல்கிறோம்.

                எனவே,
                தாங்கள் கணிணி பற்றிய எந்த சந்தேகத்தையும் கேள்வி ரூபமாக இடுகைசெய்தால்,
                அதற்கான பதில், அடியேனுக்குத் தெரியாவிட்டாலும் எங்கிருந்தாவது தேடிப்பிடித்து
                இங்கே சமர்ப்பித்துவிடுவேன்.

                தங்கள் கேட்கும் ஆர்வம் தொடரும் வரை,
                அடியேன் பதிலிருக்கும் ஆர்வம் தொடரும்.
                நன்றி,
                என்.வி.எஸ்


                Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                Encourage your friends to become member of this forum.
                Best Wishes and Best Regards,
                Dr.NVS

                Comment


                • #9
                  Re: New Technology of Photography

                  ஶ்ரீ
                  "இதற்காக ஒரு தனி போரம் ஆரம்பத்தில் ஏற்படுத்தி இருந்தேன்.
                  வரிசையாக பல பாடங்களையும் வீடியோ முறையில் இணைத்திருந்தேன்.
                  அதற்கு அதிகம் ஆதரவு இன்மையால் அதை நிறுத்திவிட்டேன்."தாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள பாடங்களளின்னும் நமது போரத்திலுள்ளதா? இல்லையெனில் திரும்பவும் அதை அப்லோட் செய்யஇயலுமா? தற்போது ந்மது போரத்தில் பல புதிய மெம்பர்கள் இதை அறிய ஆவலாயிருப்பார்களென ந்ம்புகிறேன்

                  Comment


                  • #10
                    Re: New Technology of Photography

                    Sri:
                    Dear Mr.Soundararajan,
                    Here by I am giving the list of links searched for Computer courses:
                    Please follow the links one by one, you may got the old series of lessons.

                    I don't know your level and interested subjects,
                    google for lessons of your interest you will find a lot.
                    Read them and share them with us, and put your questions
                    wherever you need clarifications.
                    It will give you quick and better performance.
                    The time taken for searching and re-uploading the old one will be much more than
                    preparing and uploading a new one with new techniques and effects for me.
                    So, leave all the past, ask more and more questions,
                    but please create an attention for myself, when you are expecting answer particularly from myself.
                    regs,
                    nvs

                    http://www.brahminsnet.com/forums/sh...embers-of-BMBC

                    http://www.brahminsnet.com/forums/sh...mputer-Courses

                    http://www.brahminsnet.com/forums/sh...rahmins-wanted


                    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                    Encourage your friends to become member of this forum.
                    Best Wishes and Best Regards,
                    Dr.NVS

                    Comment

                    Working...
                    X