Announcement

Collapse
No announcement yet.

How a sishya should be? Spiritual story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • How a sishya should be? Spiritual story

    How a sishya should be? Spiritual story
    *ஸ்ரீமதே ராமானுஜாய நம :


    *குரு பரம்பரை*


    *ஆசாரியனுக்கு சிஷ்யை சேவை*


    நம் பிள்ளை தமது அடியாரோடு திருவெள்ளறையைச் சேவித்து மீளும்போது காவேரி வெல்லம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. கரையில் ஓடம் காணவில்லை பரிசில் (தாழி வட்டமாக இருப்பதொன்று) மட்டும் இருந்தது.


    அதில் ஏறி நடுக்காவேரி வந்தனர். பொழுது சாய்ந்தது மழையும் மந்தாரமுமாய் இருந்தது திசை தெரியவில்லை அப்பரிசிலும் அமிழ்ந்து விடும்போல் இருக்க. அப்பரிசலில் விடுவான் யாரேனும் நாலி ருவர் தாழியில் இருந்து இறங்கினாள் கரை சேரலாம் என்றான்.


    யாரும் அதற்கு முற்படவில்லை ஒரு அம்மையார் (நம் பிள்ளையை அடைந்திருந்தவள்) *தாழிக்காரா!நீ 100 வயது இருப்பாய் என்று வாழ்த்தி ஜாக்கிரதையாக.கண் போன்ற வரான நம் பிள்ளைகளைக் கரை சேர்ப்பாய் என்று கூறி ஆற்றில் குதித்து விட்டாள்*.


    யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்தது ஆகையால் எல்லோரும் அதிசயித்தனர் பரிசிலும் கரை சேர்ந்து. எல்லோரும் கரை ஏறினர்.
    *நம்பிள்ளை மனம் கசிந்து ஐயோ ஒரு ஆத்மா தட்டுப்பட்டு போயிற்றே என்று அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார்*


    அவ்வமையும் நீரில் குதித்ததும் ஒரு மேட்டுத்திடரில் ஒதுக்கப்பட்டு இருந்தாள். அதுவும் கரைக்கு அருகாமையில் இருந்தது அதனால் குரல் கேட்டது. *அவ்வம்மையார் அடியேன் இங்கே சுகமே இருக்கிறேன் கவலை கொள்ள வேண்டாம் சுவாமி என்று குரல் கொடுத்தார். உடனே பிள்ளையும் பரிசிலை அனுப்பி அப்பெண்ணை அழைத்துக்கொண்டு வர செய்தார் அவள் வந்ததும் தண்டனிட்டு ஆற்றிலேயும் ஒரு மேடாய் நின்று அடியேனை ரக்ஷித்து அருளிற்றே! என்று கூற பிள்ளையும் உம்முடைய நம்பிக்கை இதுவானால் அப்படியும் ஆகலாம் என பதில் கூறினார்*


    *இதனால் சிஷ்யன் தம் சரீரம் சொத்து ப்ராணன் இவைகளை அழித்துக்கொண்டும் ஆசாரியனைக் காக்க வேண்டும் என்ற நிலை உண்டாக வேண்டும். உண்டானால் ஈஸ்வரன் அவனை (அந்த சிஷ்யனை)த் தான் பேணிக் காக்குமெ ன்பதாயிற்று!*
Working...
X