Raghavendra making sandal paste-spiritual story
உருவத்தை வைத்து அளவிடல் வேண்டாம் (திருவள்ளுவர்)
ஒரு பணக்காரர் யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். தலைமை வேதியர் பட்டாடை உடுத்தி, ஏராளமான தங்க நகைகள் அணிந்து, கைகளில் வைர மோதிரங்கள் பளபளக்க அமர்க்களமாக யாக குண்டம் முன் வந்து அமர்ந்தார். பணக்காரரின் உறவினர்கள், நண்பர்கள் ஆரவாரம் செய்தபடி இருந்தனர். யாகம் துவங்கியது. அப்போது, கிழிந்த அழுக்கடைந்த ஆடை, மெலிந்த தேகத்துடன் ஒரு வேதியர் உள்ளே வந்தார். தலைமை வேதியருடன் வந்திருந்த மற்ற வேதியர்கள் ஓரளவுக்காவது வசதியுள்ளவர்கள். ஏதோ வீட்டில் இருப்பதில் நல்ல ஆடைகளை அணிந்து வந்திருந்தனர். இவரோ, நெற்றியில் சந்தனம் மட்டும் இட்டு, வேதம் ஓத இருந்த அந்தணர்கள் மத்தியில் வந்து அமர்ந்தார். தலைமை வேதியர் அவரைப் பார்த்து முகம் சுழித்தார். எழுந்திரும்! இங்கே உட்காரக் கூடாது, நீர் ஒன்றும் வேதம் சொல்ல வேண்டாம். அங்கே ஒரு ஓரமாய் உட்கார்ந்து சந்தனம் அரைத்தால் போதும், புரியுதா!'' என்றார். வந்தவர் பதிலேதும் பேசவில்லை. தலைமை வேதியர் இட்ட கட்டளையை பணிவுடன் ஏற்றார். சந்தனம் அரைக்க ஆரம்பித்தார். அவர் சூரிய மந்திரத்தை முணுமுணுத்தபடியே சந்தனத்தை அரைக்க ஆரம்பித்தார். தலைமை வேதியர் அவரைக் கவனித்தார். "இவனுக்கு என்ன தைரியம்! வாய் முணுமுணுக்கிறதே! என்னைத் திட்டிக் கொண்டே சந்தனம் அரைக்கிறான் போலும்! யாகம் முடியட்டும், கவனித்துக் கொள்ளலாம்' என்று மனதிற்குள் கருவிக்கொண்டே யாகத்தை நடத்தினார். யாகம் முடிந்ததும் எல்லாருக்கும் சந்தனம் அளிப்பது வழக்கம். தலைமை அந்தணர் முறைப்படி முதலில் வாங்க வேண்டும். அவர் சந்தனத்தை வாங்கி உடலில் பூசினாரோ இல்லையோ! "ஐயோ அம்மா!'' என துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டார். குளிர வேண்டிய சந்தனம் உடலைச் சுட்டது. சந்தனம் ஏன் சுடுகிறது?' நான் சூரிய மந்திரம் உச்சரித்தபடியே அரைத்தேன். சூரிய பகவான் தன் வெப்பத்தை இதில் கொட்டிவிட்டார் போலும்!'' ""ஆச்சரியமாக இருக்கிறதே! நீர் என்னிலும் உயர்ந்தவர். உம்மை அவமதித்து விட்டேனே!'' தலைமை வேதியர் வருத்தப்பட்டார். சந்தனம் அரைத்தவர் மனம் நெகிழ்ந்து, சூடு தணிக்குமாறு சூரியனைப் பிரார்த்தித்தார். தலைமை வேதியரின் உடலில் இருந்த சூடு தணிந்தது. இவ்வளவு சக்தி வாய்ந்த அந்த அபூர்வ மகான் யார் தெரியுமா? ஸ்ரீ ராகவேந்தர். அவரை "ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ' என்று சொல்லி பூஜிப்போர், குளிர்ந்த மனதுடன் சகல நலனும் பெற்று வாழ்வர்.