Announcement

Collapse
No announcement yet.

On Marriage

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • On Marriage

    டும் டும் கல்யாணம் 4 J.K. SIVAN
    அத்ரி என்கிற ரிஷியின் பெண் அபாலா. பாவம் அவளுக்கு உடலில் சரும நோய். வேதகாலத்திலேயே சொறி சிரங்குகள் உண்டு போல் இருக்கிறது. வேதகால நோய்களோ? அதனால் அவளை யாரும் திருமணம் செய்த்துக்கொள்ள முன்வரவில்லை. அவள் இந்திரனை நோக்கி தவம் செய்தாள். அவள் தவத்தை மெச்சி இந்திரன் தேரில் வந்தான். அவன் தேரின் நுகத்தடியில் குதிரைகள் கட்டி இருந்ததல்லவா? அந்த நுகத்தடி துளைவழியாக அவள் மீது தேவலோக மந்த்ர தீர்த்தம் ஒன்றை அவள் தலையில் தெளித்தான். அவள் உடல் நனைந்தது. பிறகு என்ன நோய் மட்டுமா குணமாயிற்று? அவள் உடலே தேக காந்தி பெற்று பொன்னிறமாக மாலை சூரிய ஒளிபோல் ஜொலித்தது.
    கல்யாணத்தில் மணப்பெண் தலைமீது நுகத்தடி வைத்து அதன் துளை வழியாக மந்த்ர ஜலம் அபிஷேகிக்கும் மந்திரம் இந்திரனை நோக்கி தவமிருந்தபோது அப்பாலா உச்சரித்த ரிக்வேதத்தை போற்றும் மந்திரம். அதனால் தான் சாம வேதக்காரர்கள் இந்த சடங்கை மேற்கொள்வதில்லை. பெண்ணுக்கும் அவள் சந்ததிக்கும் சூரியனை போன்ற காந்தி பெற உச்சரிக்கும் மந்திரம். சாம வேதக்காரர்கள் சாமவேதத்தில் சில மந்த்ரங்களை அப்போது ஜெபிப்பார்கள்.
    பிறகு மாப்பிள்ளை தனது மனைவியாகப்போகிற பெண்ணுக்கு கூறைப்புடவை அளிக்கிறான். அவள் அதை உடுத்திக்கொண்டு வந்து அவன் அருகே அமர்கிறாள். மாப்பிள்ளையின் சகோதரி அவளுக்கு அதை உடுத்துவாள் , அல்லது உதவுவாள் . அந்த உடை மாற்றும் இடைநேரத்தில் ரிக் வேதம் கனம் எனும் மந்திரம் உச்சரிப்பார்கள். கணம் கடினம். அதில் பயிற்சிபெற்றவர்கள் தான் கன பாடிகள் . (GANA PAATI ) சாமவேதக்
    கார்கள் வைதிகர்களை சாமவேத கனம் பாராயணம் செய்யச்சொல்வார்கள்.நல்ல நாதஸ்வர வித்வானாக இருந்தால் அருமையான கீர்த்தனங்கள் ஒருபுறம் ஒலித்துக்கொண்டு இருக்கும்.
    பெண்ணுக்கு மாப்பிள்ளை அணிவிக்கும் திருமாங்கல்யம் ஒரு தாம்பாளத்தில் சபையில் இருக்கும் பெரியவர்கள், நெருங்கிய உறவுகள், மற்றும் பெரியோர்கள் தொட்டு ஆசி பெற அனுப்பப்படும். புஷ்பங்கள் அக்ஷதைகள் அவர்களுக்கு வழங்குவார்கள்.


    பிறகு மாப்பிள்ளை மாங்கல்ய தேவதையை உபாசித்து பதினாறு உபச்சாரங்களோடு (ஷோடசோபசாரம்) வணங்கி மங்கள ஸுத்ரத்தை பெரியோரிடம் காட்டி ஆசிபெறுகிறான். பெண் தந்தையின் மடியில் ஒரு நாற்காலியில் கிழக்கு நோக்கி அமர்கிறாள். எதிரே மாப்பிள்ளை நிற்கிறான். சரியான குறிப்பிட்ட முகூர்த்த காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் திருமாங்கல்யத்தை சுற்றி தாலி முடிகிறான். ஒரு முடிச்சு. கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று வாத்யார் உரக்க குரல் கொடுக்க, ஏதோ சங்கீதம் வாசித்துக்கொண்டிருந்த நாதஸ்வர தவில் விதவான்கள் ''டும் டும் டும் பீ பீ பீ '' வாசிக்கிறார்கள். இது எதற்கு என்றால் யாராவது அசுப வார்த்தைகள் சொன்னால் அது காதில் விழக்கூடாது. தும்மல் தும்மினால் அபசகுனம். அது கேட்கக்கூடாது தவிர வெகு முக்கியமான நிகழ்ச்சி என்பதால் அனைவரின் கவனமும் கவர.
    தாலி கட்டும் மந்திரம் சினிமாவில் ஒரு வரி கேட்டிருப்பீர்கள் .
    ''மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுன ; கண்டே பத்னமி சுபகே த்வம் ஜீவ சரத சதம்''





    அதன் அர்த்தம் அற்புதமானது


    "இந்த மாங்கல்ய மஞ்சள் கயிறான சரடு, புனிதமானது. பவித்ரமானது. இது என்னுடைய நீண்ட ஆராய்க வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இதை நான் உனது கழுத்தில் கட்டுகிறேன் பெண்ணே, கன்னிகையே, புனிதவதியே , நீ என்னோடும் சகல சந்தோஷத்தோடும் நூறாண்டு வாழ்க''

    நீங்கள் சாப்பாட்டிற்கு செல்லுங்கள். இன்னும் நிறைய சொல்கிறேன்.
Working...
X