Nothing is ours
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
💥 *நமக்கு ஏதும் சொந்தமில்லை:*💥
பிருகதச்வன் என்ற மன்னர் தேவலோக தலைமைப் பதவி மீது கொண்ட ஆசையால் நூறு அஸ்வமேத யாகம் செய்ய விரும்பினான்.
இதுபற்றி தன் குருவிடம் ஆலோசனை கேட்டார்.
குரு அவரிடம் மன்னா!' பதவிகள் நிலையற்றவை. தெய்வத் திருவடியை அடைவதே நிலையான பதவியைத் தரும் என்று அறிவுறுத்தினார்.
இருப்பினும் மன்னருக்கு ஆசை மனதை விட்டு நீங்கவில்லை.
தொன்னூற்று இரண்டு யாகங்ககளை நடத்தி முடித்தான். இந்த நிலையில் குரு இறந்து போனார்.
அந்தணர் குலத்தில் வாமதேவர் என்ற பெயரில் அவதரித்தார்.
ஒன்பது வயதில் இவருக்கு உப நயனம் என்னும் பூணூல் கல்யாணம் நடந்தது. அப்போது மன்னர் பிருகதச்வன் நூறாவது யாகத்தை தொடங்கியிருந்தார்.
அங்கு சென்று வாமதேவரிடம், சுவாமி!' உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் இப்போதே தருகிறேன் என்றார் மன்னர்.
மன்னா உனக்கு உரிமையாக உள்ள அனைத்துமே எனக்குரியதாகட்டும் என்றர் வாமதேவர்.
இந்த நிமிடம் முதல் என்னுடையதெல்லாம் உங்களுக்கே சொந்தம் என்று சொல்லி சிம்மாசனத்தில் வாமதேவரை அமர வைத்தான் மன்னன்.
வாமதேவர் மன்னனிடம்.... கொடுக்கும் தானத்தை தட்சிணையோடு கொடு என்றார்.
இதோ என்ற மன்னர் கழுத்தில் இருந்த முத்து மலையை கழற்ற முயன்றார்.
இதைத் தடுத்த வாமதேவர் உனக்குரிய அனைத்தும் எனக்குத் தந்துவிட்ட பிறகு, இந்த மாலையும் என்னுடையதில் அடக்கமே!, இதை எப்படி தட்சணையாகத் தரமுடியும் ? என்றார்.
மன்னர் செய்வதறியாமல் கீழே சரிந்து ஒரு வித கிரக்கத்தில் ஆழ்ந்தார்.
அப்போது கனவு வந்தது. அதில் எமதர்மன் முன் மன்னர் நின்றார்.
புண்ணியம் அதிகமாகவும் பாவம் கொஞ்சமாகவும் நீ செய்திருக்கிறாய். முதலில் எதற்குரிய பலனை அனுபவிக்க விரும்புகிறாய்? என்று எமதர்மன் கேட்டான்.
பாவத்தின் பலனையே முதலில் தாருங்கள் என்றார் மன்னர்.
அதன்படி மன்னர் கொடிய பாலைவனத்தில் விடப்பட்டார். தகிக்க முடியாத வெப்பம் நிலவியது. அப்போது முன்னாள் குரு எமதர்மன் முன் வந்து, எமதர்மா.....
இந்த மன்னனின் உடமை எல்லாம் எனக்கு உரிமையானபிறகு அவனுக்கு ஏது பாவமும் புண்ணியமும்…………………. அவனுக்கு நரகத்தை தராதே என்று கூறினார்.
உடனே பாலைவனம் நந்தவனமானது. குளிர்ந்த காற்று வீசியது. இத்துடன் கனவு கலைய மன்னர் எழுந்தார்.
வாமதேவராக வந்துள்ளது தன் முன்னாள் குரு என்ற உண்மையைத் தெரிந்து கொண்டான்.
தன் செல்வத்தை மட்டுமின்றி பாவ புண்ணியத்தையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்த குரு நாதரின் பெருந்தன்மை கண்டு மகிழ்ந்தார்.