Announcement

Collapse
No announcement yet.

🔴 *அரை ரூபாயில் அமாவாசை.*

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🔴 *அரை ரூபாயில் அமாவாசை.*

    வடலூர் என்றொரு ஊரில் அமாவாசை எனும் பெயருடைய கூலிக்காரனொருவன் வாழ்ந்து வந்தான்.
    அவன் தினந்தோறும் கறவைகளை உயிர்பறித்து மாட்டிறைச்சியாக்கி விற்று வாழ்க்கை நடத்தி வந்தான்.
    ஒரு நாள் அவ்வூரில் வள்ளலாரின் போதனை நடந்தது. அன்று அந்த போதனையை முழுவதும் கடைசி வரை இருந்து கேட்டான் அமாவாசை.


    வள்ளலாரின் போதனை அமாவாசையின் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. மனம் திருந்திட எண்ணம் கொண்டு பின்னொரு நாளில் வள்ளலாரை சந்தித்து ஆசி பெறச் சென்றான்.
    அவரோட ஆசியைப் பெற்ற அவன், அன்று முதல் உயிர் வதை செய்யும் தொழிலை செய்வதில்லையென உறுதியை வள்ளலாரிடம் எடுத்துக் கொண்டான்.


    அமாவாசையின் உறுதியை எண்ணிய வள்ளலார் அவனிடமே.... "அமாவாசை!..
    அன்றாடம் அனுதினமும் மாட்டிறைச்சியாக்கி விற்பதில் உனக்கு என்ன கூலி கிடைக்கும்?" என வள்ளலார் கேட்தார்.
    *மாட்டை அறுத்து இறைச்சியாக்கிக் கொடுத்தால் எனக்கு அரை ரூ தருவார்கள்.
    வளளலார் அமாவாசையிடம் அரை ரூபாய் ஒன்றை கொடுத்தார். இதை பத்திரமாக நீ வைத்துக் கொள்ள வேண்டும் என கூறிக் கொடுத்தார். நீ மாட்டை அறுக்காதிருந்தால் அறுக்காத மாட்டுக்குக் கூலியாக தினமும் உனக்கு அரை ரூபாய் வந்து சேரும் எனக் கூறி ஆசீர் வதித்தார்.


    அமாவாசையும் அன்று முதல் ஜீவகாருண்யத்துடன் உயிர்களை நேசிக்கத் தொடங்கினார். பின் வயலில் வேலை செய்து கூலி பெற்று வாழ்க்கை நடத்தினான்.
    எனவே சைவமாகி பிறவிப்பயனைய, இறை தொண்டு புரிந்து மீண்டும் பிறவாமை பெற முக்திக்குண்டான பேறு பெற அடியார்களுடன் இணைந்து சைவம் வளர்ப்போம்.
    திருச்சிற்றம்பலம்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X