Announcement

Collapse
No announcement yet.

நம் முன்னோர்கள் அறிவாளிகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நம் முன்னோர்கள் அறிவாளிகள்

    சுபஸ்ய ஷீக்ரம் என்பது ஆன்றோர் வாக்கு. நல்லவை விரைவாக நடக்க வேண்டும், தள்ளிப் போடப்படுதல் கூடாது! இதை அடிப்படையாக வைத்தே, விவாஹமானவுடன் ”சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்” என்று பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்வார்கள். இது அவர்கள் விஞ்ஞானத்தை நன்கு அறிந்ததால் தான்! ஆனால் நாம் நம் முன்னோர்களைக் கண்டு கொள்வதில்லை. ஏனெனில் அவர்கள் எதுவுமே காரணம் சொல்லாமல் செய்யச்சொன்னதால், அவர்கள் கூற்றில் நம்பிக்கை இல்லை! நன்கு ஆராய்ந்து காரணம், நாம் தான் கண்டு பிடிக்கவேண்டும்.

    பெண்கள் வயது ஏற ஏற அவர்கள் இடுப்பு எலும்பு முற்றிப்போய் ப்ரஸவம் ஆவது கடினமாகும். மேலும் ‘மைடோ காண்ட்ரியல் டி.என்.ஏ’ என்ற ஜீன் (பண்புக்கூறு, வம்சாவளி மூலக்கூறு அல்லது மரபணு) ’ம்யூட்டேஷன்’ எனப்படும் ‘கட்டமைப்பு மாறும்’ செயலால் ஒவ்வொரு மாற்றத்திலும் தனது திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறது. மனிதர்களில் பெண்களிடம் மட்டுமே காணப்படும் மரபணு ஆனதாலும், தாயிடமிருந்து பெறப்படுவதாலும் இது வலிமை பொருந்தியதாக இல்லாவிட்டால் பலப்பல நோய்கள், குறைபாடுகளுடன் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. பெண்களின் வயது ஏற ஏற இது வலிமை குறைந்து விடும். அதனால் தான் விவாஹம் சிறு வயதில், அதாவது 18க்கு மேல் 21க்குள் (அவர்கள் மனமுதிர்ச்சி பெற்றவுடன்) நடத்தி உடனே ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் முதல் குழந்தையும், அதன் பிறகு 30 வயதிற்குள் மேலும் ஒன்றோ அல்லது இரண்டு மட்டும் பெற்றுக்கொளவது சிறந்தது என நமது முன்னோர்கள் வலியுறுத்தினார்கள். அந்த காலத்தில் இதை மீறிப் பல குழந்தைகளைப் பெற்றவர்கள் குழந்தைகளுக்கு, வயது ஏற ஏறப் பல குறைபாடுகள் உண்டாயின. இந்த காலத்திலோ கேட்க வேண்டாம். ஒன்று பெற்றுக்கொள்ளவே யோசனை, அதிலும் விவாஹம் செய்து கொள்ளாமலே ‘லிவ் இன்’ முறையில் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் சிலர்! யார் அறிவாளிகள் என்று இவர்கள் இதைப் படித்துப் புரிந்து கொள்ளட்டும்! “குழந்தை பெறுவதைத் தள்ளிப்போட்டு அவர்களை பிற்பாடு துன்பத்தில் ஆழ்த்தாதீர்கள்” என்பதே எனது வேண்டுகோள். (இது எனது மகன் டாக்டர் வரதமுர்த்தி சொல்லக்கேட்டு எழுதியது).
    - ஸ்ரீநிவாஸன் ஸபாரத்னம்
Working...
X