இரண்டும் ஒன்றல்ல.
ஒரே மாதிரி இருக்கிறவங்களை இரட்டையர்கள்னு சொல்வோம். விலங்குகளிலும் ஒரே மாதிரி தோற்றம் கொண்டுள்ளவை உண்டு. ஆனால், அவை இரட்டையர் வகையறா இல்லை. இரண்டுக்கும் பேர், குணம், வாழிடம், பழக்கவழக்கம்னு நிறைய வேறுபாடுகள் இருக்கும்.
சீலும் கடல் சிங்கமும்.
சீல், கடல் சிங்கம் இரண்டையும் பார்க்கறவங்க, ரெண்டும் ஒரே விலங்குகள்தான்னு நினைக்கலாம். ஆனா, உத்துப் பார்த்தா சின்னச் சின்ன வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கலாம்.
1. கடல் சிங்கத்துக்குக் காது மடல்கள் உண்டு. சீலுக்கு காது துளைகள் மட்டுமே உண்டு.
2. கடல் சிங்கத்துக்கு நீளமான முன் துடுப்புகள் இருக்கும். சீலுடைய முன் தடுப்புகள் குட்டையாக, மயிரிழைகளுடன் இருக்கும்.
3. கடல் சிங்கம் நிலத்துல துடுப்பின் மூலமா நடக்கும். சீல் தன்னோட துடுப்பைப் பயன்படுத்தாம உடலைத் தரையில் தேய்த்து நடக்கும்.
4. கடல் சிங்கம் நீந்தும்போது தன்னோட முன் துடுப்புகளை பறவையோட றெக்கை மாதிரி விரித்து நீந்தும். சீல், முன் தடுப்புகளைவிட பின் தடுப்புகளைப்
பயன்படுத்தி நீந்தும்.
-- பிருந்தா. மாயாபஜார். குழந்தைகளின் குதூகல உலகம்.
-- ' தி இந்து ' நாளிதழ். புதன், அக்டோபர் 2, 2013. .
Posted by க. சந்தானம்