Announcement

Collapse
No announcement yet.

cartoon

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • cartoon

    kudimahanin koLkai

  • #2
    Re: cartoon

    Sir,
    I sincerely feel that cartoons like this are bad and not suitable for this site.
    I am also of the opinion that we go a bit slow in publishing political cartoons/ and stick to what we started with.
    To spread Brahmins thoughts, contributions and culture, rituals etc.
    We are slowly veering off our track I feel. It may be hilarious to some, but it is not required
    It is my humble opinion and I leave the stage for other seniors to comment.
    Varadarajan
    Last edited by R.Varadarajan; 04-11-14, 21:47.

    Comment


    • #3
      Re: cartoon

      Well Sir you won't see those hereafter

      Comment


      • #4
        Re: cartoon

        Thank you.But still I would like the views from elders like SSRI.NVS,

        Sri.Narasimhan, Sri.Gopalan n others.I dont want anything to be decided on just my opinion.
        varadarajan

        Comment


        • #5
          Re: cartoon

          Mr.Varadarajan,
          I would like to tell you first weshould not give any importance to such nasty matters. I wonder why Mr. Soundarrajan sir reproduced this cartoon in our brahmin site. This is not only in bad taste and degrade our community . Let us forget this and proceed with our responsibility to our community..Narasimhan

          Comment


          • #6
            Re: cartoon

            ஶ்ரீ:
            அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உறுப்பினர்களுக்கு,
            நமஸ்காரம்.

            அடியேனுடைய இணையதள ஸேவைக்கான நோக்கம் சிதைந்து கொஞ்சம் கொஞ்சமாக திசை மாறி வந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும்.

            ஆரம்ப காலத்தில் வைணவர்களுக்கு மட்டுமே என்றிருந்த நோக்கம்
            கீழ்க்கண்ட ஆழ்ந்த சிந்தனையின் விளைவாக மாற்றம் கண்டது.
            வைணவம், சைவம் போன்றவை ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயம்
            ஆனால் வைதீகம் என்பது முற்றிலும் சரீரம் சம்பந்தப்பட்டது எனவே
            தர்மசாஸ்த்ரம் என்பது ப்ராஹ்மணர்கள் அனைவருக்கும் பொதுவானது
            வைதீகம் முழுமையும் தர்மசாஸ்த்ரம், ஸ்ம்ருதிகள் இவற்றின் அடிப்படையிலானது
            எனவே நம் வைதீக ஸேவை என்பது ப்ராஹ்மணர்கள் அனைவருக்கும் பொதுவானதாக
            இருக்கவேண்டும் என்பதாகச் சிந்தித்து "அஹோபிலம்.காம்" என்கிற நீண்டகாலம் இயங்கிவந்த
            இணைய தளத்த்தை செயல்பாடின்றி நிறுத்திவிட்டு, "ப்ராமின்ஸ்நெட்.காம்" என்கிற இந்த
            இணைய தளத்தைத் தொடங்கினேன்.
            வைதீகத்திலும், தர்மசாஸ்த்ரத்திலும் ஏற்படுத்திக்கொண்ட அநுபவ அறிவுடன்
            கம்ப்யூட்டர் சம்பந்தமான பல ப்ரோக்ராம்கள், இணைய வடிவமைப்பு போன்ற
            செயல்பாடுகளையும் அறிந்திருந்தமையால், பலருக்கும் பயனுள்ள வகையில்
            நம் அநுபவத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த இணையதளம்
            தொடங்கப்பட்டது.

            உலகத்தில் எத்தனையோவிதமான மோகங்கள் உள்ளன
            அவை அனைத்துமே மனிதனின் பணத்தையும் நேரத்தையும் விரையம் செய்யக்கூடியவையாகவே இருக்கும்.
            "ஐடியல் ப்ரைன் ஈஸ் த டெவில்ஸ் ஒரக்*ஷாப்" என்கிற பழமொழிக்கிணங்க
            ஒரு மனிதன் வேலையற்று அதிகநேரம் வெறுமனே இருப்பானாகில் நிச்சயம் அவன்
            ஏதாவதொரு துர்ப்பழக்கத்திற்கு ஆளாகிவிடுவான்.
            இந்த விதமான யோசனையினால் எந்தப்பழக்கத்திற்கும் ஆளாகிவிடாமல் தற்காத்துக்கொள்ள
            ஆரம்பிக்கப்பட்ட பழக்கமே இந்த இணையதள மோகம்.
            ஆரம்பகாலத்தில் (1994-95) இதைக் கற்பதற்கும், பயிற்சி பெறுவதற்கும்
            வருமானத்தின் பெரும்பகுதியைச் செலவு செய்துள்ளேன்.

            கடந்த 20வருட காலத்தில் அடியேன் செலவுசெய்த தொகைக்கும் இதன்மூலம் (சமீபகாலமாக) கிடைத்த
            வருமானத்தையும் ஒப்பிடவேண்டுமானால் ஒரு பட்டுப்புடவை வாங்கி இலவசமாக அதனுடன் ஒரு கைக்குட்டையைப்
            பெற்றதற்குச் சமமாகும்.

            இந்த இணையதளஸேவையும் ஒருவிதமான மோகமே என்பது புரிந்தே இதில் ஈடுபடுகிறேன்
            ஏனெனில் இதில் பணம்மட்டும்தான் விரையமேயன்றி, புத்தி மாறாட்டமோ, உடல்நலக்கேடோ எதுவுமில்லை
            மேலும் பலருக்கு இது பயனுள்ளதாக அமைவதால், ஓரளவு புண்ணியம் ஈட்டவும் முடியும் என்கிற நம்பிக்கை.


            "சொல்லுதல் யார்க்கும் எளிதாம் அரியது சொல்லிய வண்ணஞ் செயல்" - என வள்ளுவர் கூற்றுக்கிணங்க
            இப்படிச் செய்யலாம், அப்படிச் செய்யலாம் என உபயோகிப்பவர்களுக்கு நிறைய தோன்றுகிறது,
            செயல்படுத்தும் இடத்தில் இருப்பவர்கள், இதைச் செயல்படுத்தினால் என்ன நேருமோ - என ஒவ்வொன்றிலும்
            ஒரு தயக்கமும், குழப்பமும் உருவாகிறது.

            சம்பந்தம் இல்லாமல் இவ்வளவு நீளமான வ்யாஸம் எதற்கு என்கிறீர்களா - தற்போது விஷயத்திற்கு வருகிறேன்:
            இதுவேண்டாம், அதுவேண்டாம் என ஒவ்வொன்றாகத் தடுத்து நிறுத்தினால், அதனால் ஈர்க்கப்பட்டு வரும் ஒரு சில
            பார்வையாளர்கள் மற்ற சத் விஷயங்களைப் பார்கநேரிடுவதையும் தடுத்துவிடக்கூடுமோ என்கிற அச்சம் காரணமாகவே
            உபயோகிப்பாளர் சுதந்திரத்தைப் பாதுகாக்க - தர்மத்துக்கும், வைதீகத்துக்குச் சம்பந்தம் இல்லாத பலவிஷயங்களை அநுமதித்து வருகிறேன்.

            தாஸன்
            என்.வி.எஸ்


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment


            • #7
              Re: cartoon

              தங்களின் விளக்கமான பதிலில் இத்தள நோக்க சிதைவின் தங்கள் ஆழ்ந்த வருத்தம் தெளிவாகிறது.என் பொருட்டு இது நேர்ந்ததற்காக வருந்துகிறேன்.சீரியஸான விஷயங்களுக்கு இடையில் ஹ்யூமரஸ் தேவைப்படும் என்ற எண்ணத்திலும் நான் கார்ட்டூன் போஸ்ட் துவங்குமுன் இதேஃபோரத்தில் நான் பார்த்த கார்டூன்களால்[நகைச்சுவையால்][கார்ட்டூன் போஸ்ட் செய்தவர்களின் பெயரை வெளியிடவிரும்பவில்லை] கவரப்பட்டு இப்பகுதியைத் தொடங்கினேன் இது சிறிது எல்லையைக் கடந்துவிட்டது போலும்.அதற்காக மன்னிக்கவும். இதுபோன்ற நீண்ட விளக்கங்கள் தரவேண்டிய சூழ்நிலை தடுக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தில் தான்
              Well Sir you won't see those hereafter
              என்று உடனடியாக பதிலளித்திருந்தேன் இருப்பினும் தடுக்க இயலாமற்போய்விட்டது.நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டுமெனப்பிரார்த்தித்து நடந்து முடிந்த இந்த கசப்பான நிகழ்வுக்கு பொருப்பேற்று மன்னிக்க வேண்டுகிறேன்

              Comment


              • #8
                Re: cartoon

                ஶ்ரீ:
                அன்புள்ள சௌந்திரராஜன்,
                தங்கள் கருத்தை முற்றிலும் அடியேன் ஆதரிக்கிறேன்.
                அந்த எண்த்தில்தான் அடியேன் வாளாவிருந்துவிட்டேன்.
                இதில் வருந்துவதற்கோ மன்னிப்புக் கேட்பதற்கோ ஒன்றுமில்லை என்பதே அடியேன் கருத்து.
                ரசனைகள் மாறுபடும்.
                ஒருவரே கர்நாடக இசையையும் ரசிக்கலாம், புதிய வரவான மேற்கத்திய இசையையும் ரசிக்கலாம்
                இதில் தவறு என்ன இருக்கிறது?
                மேலும் தாங்கள் எதையும் தங்கள் சொந்தத் தயாரிப்பாக வெளியிடவில்லை,
                ஏதோ சில பத்திரிகைகளில் வெளிவந்தவைதானே? (மன்னிக்கவும் அதுபோன்ற இடுகைகளை அதிகமாக அடியேன் கவனித்ததில்லை).

                நாம் இந்த உலகத்தில், இந்த நாட்டில், இப்படிப்பட்ட மனிதர்களுக்கிடையில் இருந்துதான்
                ஆன்மீகம் எனும் புனித விஷயங்களிலும் ஈடுபடவேண்டியிருக்கிறது.
                எனவே அரசியல்பற்றிய விழிப்புணர்வும் தேவை என்பதில் அடியேனுக்கு மாற்றுக் கருத்துக்கிடையாது.
                ஆனால் அடியேன் அரசியல்பற்றி கருத்துக்களை எங்கும் எவரிடமும் பகிரந்துகொண்டதில்லை.
                தேர்தல் நேரங்களில், ஆர்வம் காரணமாக சில கருத்துக்கணிப்புகள் போன்றவற்றைப் பகிர்ந்துள்ளேன்.

                ஆயினும் தயவுசெய்து மனம் தளராதீர்கள்.
                அடியேனைப் பொருத்தவரை "சம்திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங்" - எதையுமே போஸ்ட் செய்யாமல்
                எந்தவித நடவடிக்கையும் இன்றி இருப்பதைக் காட்டிலும், நகைச்சுவை விஷயங்களையாவது பகிர்ந்துகொள்ளுதல் வரவேற்கத்தக்கதே!


                ராமாயணம், காஞ்சிப் பெரியவாள் விஷயங்கள், ஸம்ப்ரதாய விஷயங்கள் போன்ற எண்ணற்ற உபயோகமான பல விஷயங்கள் தாங்கள் அவ்வப்போது
                பகிர்ந்துகொண்டுதான் வருகிறீர்கள்.
                எனவே தங்கள் பணி தொடரட்டும்!
                "போற்றுவார் போற்றல்கள் தங்களுக்கும் -
                தூற்றுவார் தூற்றல்கள் (நிர்வாகியான) அடியேனுக்கும்" சென்று சேரட்டும்.
                எனவே தூற்றுவதையும் நன்கு அநுமதிப்போமாக!

                தாஸன்,
                என்.வி.எஸ்


                Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                Encourage your friends to become member of this forum.
                Best Wishes and Best Regards,
                Dr.NVS

                Comment

                Working...
                X