Information
‘அம்பிகை வளர்த்த அறங்கள்’ என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன்பு ‘மனித குலம் செய்யவேண்டிய 32 வகை அறங்கள்’ குறித்து ஒரு பதிவை அளித்திருந்தோம். அவை மிகவு சுருக்கமாக இருந்தது. அது பற்றி விரிவான ஒரு பதிவை அளிக்குமாறு அப்பொழுதே ஒரு வாசகர் கேட்டிருந்தார். அது குறித்து உரிய ஆதாரங்களை திரட்டி நேரம் வரும்போது அளிப்பதாக அவருக்கு பதிலளித்திருந்தோம்.
சமீபத்தில் ஒரு நாள் பல்லாவரம் சென்றிருந்தபோது, ‘ஸ்ரீ பூர்ண மஹா மேரு டிரஸ்ட்’ என்னும் ஆதரவற்ற முதியோர் இல்லம் ஒன்றை பார்க்க நேர்ந்தது. அந்த முதியோர் இல்லத்தின் வாசலில் ‘மனித குலம் செய்யவேண்டிய 32 அறங்கள்’ குறித்து ஒரு மிகப் பெரிய பேனரை வைத்திருந்தார்கள். அதை படித்தபோது நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை
Notice
இவை அனைத்தும் நம் அம்பிகை தனது பல்வேறு அவதாரங்களில் வளர்த்த அறங்களே. ஆகையால் தான் அவளுக்கு ‘தர்மசம்வர்த்தினி’ என்கிற பெயர் உண்டாயிற்று. ‘தர்மசம்வர்த்தினி’ = அறம் வளர்த்த நாயகி.
அறங்களை படிக்கும்போதே இத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறதே… அவற்றை செய்தால் இன்னும் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்?
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல (குறள் 39)
இவற்றில் பல அறங்கள் செய்ய மிகப் பெரிய பொருளாதார வசதி தேவையில்லை. பரபரப்பான உங்கள் வாழ்க்கையில் சில மணித்துளிகளும், இதயத்தின் ஓரத்தில் கொஞ்சம் ஈரமும், ஏழைகளுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணமுமே போதுமானது.
திருக்குறளில் பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் அறம் செய்து வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். (குறள் 228)
===========================================================
மனித குலம் செய்யவேண்டிய 32 அறங்கள்
===========================================================
மாதம் ரூ.5,000/- சம்பாதிப்பவர் முதல் ரூ.5,00,000/- சம்பாதிப்பவர் வரை அவரவர் சக்திக்கு ஏற்ப, செய்யக்கூடிய பலவகை அறங்கள் மேற்படி பட்டியலில் இடம்பெற்றுள்ளன.