Announcement

Collapse
No announcement yet.

'கொசு புராணம்'

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 'கொசு புராணம்'

    " உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு.
    2.5 மில்லி கிராம் எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47.
    மழை கொட்டும்போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு.
    ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது. அதுதான் நீங்கள் கேட்கும் ரீங்காரம்.
    சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன.
    உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று கின்னஸால் அறிவிக்கப்பட்டதும் கொசுதான்.
    ஆண் கொசுவைவிடப் பெண் கொசுவே பெரியது. ஆண் கொசு சைவம். இலை தழைகளிலேயே அது உணவுகொள்ளும். கடிப்பதும் ரத்தம் குடிப்பதும்
    பெண் கொசுதான்.
    கடிக்கும்போது ஒரு கொசு இரண்டு குழல்களை உடலுக்குள் நுழைக்கிறது. ஒரு குழல் ரத்தம் உறையாதிருக்க நொதிப்பொருளை செலுத்துகிறது. மறு குழல் உறையாத ரத்தத்தை உறிஞ்சுகிறது.
    ' ஏடிஸ் ' வகை கொசுதான் டெங்கு பரப்புகிறது.
    ஒரு தொற்று நோயாளியைக் கடித்த கொசு ஆரோக்கியமானவரையும் கடிக்கும்போது தொற்றுக்கிருமிகளை உட்செலுத்தி டெங்கு பரப்புகிறது.
    டெங்குவிற்கு மருந்தில்லை; டெங்குவில் மீண்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடல் மீண்டும் அடைவதில்லை.
    குடினீர் முறையாகக் கிடைக்காத தேசத்தில் தெருவெல்லாம் நீர்த்தேக்கம். அதுதான் கொசுக்களின் ஜென்ம சமுத்திரம்.
    எப்போது சுத்தமாகுமோ சாக்கடையும் அரசியலும்?"
    -- வாசகர் கேள்விகள் -- கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள் !
Working...
X