Announcement

Collapse
No announcement yet.

எல்.இ.டி. விளக்குகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • எல்.இ.டி. விளக்குகள்

    எல்.இ.டி. விளக்குகளால் கண் பார்வை பறிபோகும். ஸ்பெயி ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவல்.
    விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எல் இ டி எனப்படும், ' லைட் எமிட்டிங் டையோடு ' விளக்குகள் அறிமுகம் ஆனது.
    இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால் ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
    ஆனால், எல் இ டி பல்புகளால் மனிதரின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் தற்போது பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.
    எல் இ டி பல்புகள் சுற்றுச் சூழலுக்கு சிறப்பானது என்றாலும், அதில் இருந்து நீல மற்றும் செங்கரு நீல ( வயலட் ) கதிர்கள் வெளியாகின்றன. இவை சிறிய அலைவரிசை கொண்ட சக்திவாய்ந்த கதிர்கள். இவை அதிக சக்திவாய்ந்தவை என்றாலும், குளுமையாக இருப்பதால் சாதாரணமாக அதை பார்த்துக் கொண்டிருக்க முடியும். இதுபோன்று எல் இ டி விளக்குகளின் வெளிச்சத்தை பார்க்கும்போது, அது கண்ணின் விழித்திரையை பாதிக்கும்.
    கண்கள், வெளிச்சத்தின் துணையுடன் பார்க்கக்கூடிய தன்மை கொண்டது. மாறாக வெளிச்சத்தை மட்டும் பார்க்கக்கூடியது அல்ல. எல் இ டி விளக்குகள் உமிழும் வெளிச்சம் குளுமையாக இருப்பது போல் தோன்றினாலும், அதனால் கண்பர்வைக்கு ஆபத்து அதிகம்.
Working...
X