கண்ணால் கண்டறியப்படும் தன்மையின் அடிப்படையில், உலகில் உள்ள பொருள்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை: அருவம், உருவம், அரூஉருவம்.
அருவம் : தென்றல் காற்று வீசுகிறது. அந்தக் காற்றுக் கண்ணுக்குத் தெரிவதில்லை அல்லவா? இப்படிப் பார்வைக்குப் புலப்படாத வடிவங்களை, உருவம் இல்லாதவற்றை அருவம் என்பார்கள். மனம் முதலான கருவிகளும் கண்ணுக்குத் தெரிவதில்லை.
உருவம் : கண்ணால் கண்டறியப்படுவன உருவம் எனப்படும். நீரைப் பார்க்கலாம். நிலத்தைக் காணலாம்.
அரூ உருவம் : பவுர்ணமி நாட்களில் முழு நிலவு தெரிகிறது. ஆனால், அதே நிலவு பிறைச் சந்திரனாக இருக்கும் போது புலப்படுவதில்லை. விறகில் கொழுந்து விட்டு எரியும் தீ, பார்வைக்குப் பளிச்செனத் தெரிகிறது. ஆனால், அதே தீ வெந்நீரில் இருக்கும் போது வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரிவதில்லை. இப்படிக் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் அமைவன அரு உருவம் எனப்படும்.
-- புலவர் வே. மகாதேவன்.
-- தினமலர் .பக்திமலர். ஜூன் 6, 2013.
Posted by க. சந்தானம்