மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவை இனி கார்ப்பரே எண்களும் மாறலாம்.
இந்தியாவில் ஒரு செல்போன் நிறுவனத்தின் சேவை பிடிக்கவில்லை என்றால், செல்போன் எண்ணை மாற்றாமலேயே நிறுவனம் மாறிக்கொள்ளூம் நம்பர் போர்டபிலிட்டி சேவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதியை பயன்படுத்தி, பலர் தங்களது செல்போன் எண்ணை மாற்றாமல் தங்களுக்கு விருப்பமான நிறுவங்களுக்கு மாறிக்கொண்டனர். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் குரூப் எண்களை மாற்றுவதில் சிக்கல் இருந்துவந்தது. இந்நிலையில் இத்தகைய கார்ப்பரேட் குரூப் எண்களையும் போர்டபிலிட்டி சேவையின் கீழ் மாற்றிக்கொள்ளும் வசதி அமுலுக்கு வருவதாக இந்திய தொலைதொடர்புகட்டுப்பாட்டு ஆணையம் ( டிராய்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிராய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒரே விண்ணப்பத்தின் மூலமாக 50 எண்கள் வரை ஒட்டுமொத்தமாக நிறுவனம் மாறிக்கொள்ளலாம். கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு சேவை மாற்ற ஆபரேட்டர்களுக்கு 48 மணிநேரம் அனுமதி வழங்கப்படுவதாகவும் அதில் டிராய் தெரிவித்துள்ளது. கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் குழுவாக தங்களின் எண்களை மாற்றிக்கொள்ள விரும்பும் பட்சத்தில் அது குறித்து சம்பதப்பட்ட அந்நிறுவனத்தின் அதிகாரி கையோப்பம் பெற்று சமர்ப்பிக்கப் பட்ட பிறகே சேவை மாற முடியும் எனத் தெரிகிறது.
-- தினமலர் . 26. 7 . 2013.