சாதனையாளர்களை உருவாக்குவது எது?
அந்த இளைஞன் ஒரு சிறந்த தோட்டத்தை அமைத்து தனது வீட்டில் பராமரித்து வந்தான். ஒரு நாள் பட்டாம்பூச்சி ஒன்று ஒரு பூந்தொட்டியில் முட்டையிட்டதை பார்த்தான். அது முதல் அந்த முட்டையின் வளர்ச்சியை மிகவும் ஆர்வமாக கவனித்து வரலானான்.
ஒரு கட்டத்தில் முட்டை அசைந்தது. முட்டை உடைந்து ஒரு உயிர் ஜனிப்பதை பார்க்க அவனுக்கு பரவசமாய் இருந்தது. மணிக்கணக்கில் அந்த முட்டையை கவனிப்பதில் கழித்தான். சிறிது நாளில் முதலில் ஒரு புழுவின் தலைமட்டும் வெளியே வந்தது. இவனுக்கு பரவசம் தாளவில்லை. உடனே ஒரு லென்சை கொண்டு வந்து அதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான். அந்தப் புழு வெளியே வர மிகவும் போராடிக்கொண்டிருப்பது இவனுக்கு தெரிந்தது. இவன் எப்படியாவது அதற்கு உதவவேண்டும் என்று தீர்மானிக்கிறான். ஒரு சிறிய கத்திரிக்கோலை கொண்டு வந்து அந்த முட்டையை உடைத்து அதற்கு உதவுகிறான்.
கடைசியில் புழு முழுதுமாய் வெளியே வந்துவிட்டது. இவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அந்த புழு வளர்ந்து பட்டாம்பூச்சியாக மாறி பறக்க ஆரம்பிக்கும் தருணத்தை பார்க்க ஒவ்வொரு நாளும் காத்திருந்தான். ஆனால் கடைசி வரை அது நடக்கவில்லை. மாறாக தலைமட்டும் கனத்து போன புழு அங்கேயும் இங்கேயும் இலைகள் மீது ஊர்ந்து கடைசியில் இறந்துவிட்டது.
மிகவும் ஏமாற்றமடைந்த இவன், தாவரவியல் படித்து வரும் தனது நண்பன் ஒருவனை சந்தித்து நடந்ததை கூறி காரணத்தை கேட்டான்.
புழுவானது முட்டையிலிருந்து வெளியே வர, நடத்தும் போராட்டமானது (STRUGGLE) இறைவன் அதற்கு தந்த பரிசு. அந்த போராட்டம் தான் அதன் இறக்கைகளுக்கு இரத்தத்தை செலுத்தி அது வெளியேறிய பின்னர் வளர்ந்து பறக்க உந்துதலாக இருக்கும் என்றும், அதே போல, முட்டையை முட்டி மோதும் முயற்சியானது அதன் தலையை அளவாக வைத்திருக்கும் என்றும் அப்போது தான் மெல்லிய இறக்கைகளை தலையால் தாங்க முடியும் என்றும் இது தான் ஒரு புழு, வண்ணத்துப் பூச்சியின் மாறும் சூட்சுமம் என்றும், இவனது ஆர்வத்தாலும் அவசரத்தாலும் முட்டையை உடைத்து ஒரு வண்ணத்து பூச்சியை கொன்றுவிட்டான் என்று கூறியபோது இவன் திடுக்கிட்டான்.
போராட்டம் (STRUGGLE) என்பது வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று. கேட்கும் அனைத்தும் கிடைத்தால் நம்மை அது வளர்ப்பதற்கு பதில் முடக்கி போட்டுவிடும். போராட்டம் இல்லை எனில் பலமும் இல்லை. வளர்ச்சியும் இல்லை.
சரித்திரத்தை புரட்டினோம் என்றால் செழுமையைவிட வறுமையும் போராட்டமுமே பல சாதனையாளர்களை உருவாக்கியிருக்கி இருப்பதை காணலாம்.
சராசரி மனிதர்களாக வாழ்ந்து மறைய விரும்புவர்களுக்கு இந்த பதிவும் தேவையில்லை இதன் கருத்தும் தேவையில்லை. ஆனால் ஏதேனும் முத்திரையை இந்த உலகில் பதித்துவிட்டு மறைய விரும்புகிறவர்கள் நிச்சயம் இந்த பதிவை நினைவில் கொள்ளவேண்டும்.
ஒரு பெற்றோராக நமது குழந்தைகளுக்கு நாம் தேவைக்கு அதிகமாகவே உதவிகள் செய்து அவர்களை அவர்கள் காலில் நிற்க பழக்காமல் முடக்கிப் போட்டுவிடுகிறோம். வாழ்வின் யதார்த்தமான ஏமாற்றங்களை, சிறு சிறு தோல்விகளை கூட அவர்கள் எதிர்கொள்ள முடியாத அளவு பலவீனர்களாக வளர்க்கிறோம். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் வளர்ந்தபிறகு கூட எந்த வித சவால்களையும் எதிர்கொள்ள இயலாமல் துவண்டுவிடுகின்றனர்.
செல்லும் பயணத்திற்கும் பாதைக்கும் ஏற்றவாறு நம் பிள்ளைகளை தயார் செய்வதைவிடுத்து பிள்ளைகளுக்கு ஏற்றவாறு தான் நாம் பாதையையே தேர்ந்தெடுக்கிறோம்.
போராட்டம் என்பது வெற்றிகரமான வாழ்விற்கு அவசியமான ஒன்று என்பதை நாம் உணர்வோம். நமது பிள்ளைகளுக்கும் உணர்த்துவோம்.
- See more at: http://rightmantra.com/?p=13819#sthash.gMnXc8HC.dpuf