Announcement

Collapse
No announcement yet.

வரமா..... சாபமா?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வரமா..... சாபமா?

    வரமா..... சாபமா?


    உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்க வேண்டும்; உலகத்தில் உள்ள அனைத்தையும் உடனடியாக கண்டு களித்து, உண்டு தீர்த்தாக வேண்டும். மொத்தத்தில், உழைக்காமல் உல்லாசமாக வாழ வேண்டும்; இதுதான் இன்றைய பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. உழைக்க விரும்பாத சோம்பேறிகளின் வாழ்க்கை எப்படி முடிந்து போகும் என்பதற்கு வியாசர் கூறிய கதை இது:
    ஒட்டகம் ஒன்று, தனக்கு நீண்ட கழுத்து இருந்தால், இருந்த இடத்திலிருந்தே சுலபமாக உணவைப் பெற்று விடலாமே என நினைத்து, அத்தகைய நீண்ட கழுத்தைப் பெறுவதற்காக பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்தது. அதன் தவத்திற்கு இரங்கிய பிரம்ம தேவர், 'ஏன் இவ்வளவு கடுமையாக தவம் செய்கிறாய்... உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார்.
    'சிருஷ்டி கர்த்தாவே... என் கழுத்து நூறு மீட்டருக்கு மேல் நீண்டதாக இருக்க வேண்டும்; அந்த வரத்தைத் தாருங்கள்...' எனக் கேட்டது ஒட்டகம். அவ்வாறே வரத்தைக் கொடுத்தார் பிரம்மதேவர்.
    ஒட்டகத்திற்கு இப்போது கழுத்து மிக நீண்டதாக மாறியது. இதனால், அதற்கு சந்தோஷத்தில் தல, கால் புரியவில்லை. 'அப்பாடா... இனிமேல் உணவு தேடி அலைய வேண்டாம்; இருந்த இடத்தில் இருந்தபடியே கழுத்தை நீட்டி, வளைத்து தின்னலாம்...' என நினைத்து மகிழ்ந்தது; அது நினைத்தபடியே வாழ்க்கை சொகுசாக சென்றது.
    இவ்வாறு சுகமாக வாழ்ந்து கொண்டிருந்த போது, ஒரு நாள் பெருத்த புயற் காற்றுடன் மழை பெய்தது. ஒட்டகம் பயந்து போய் தன் தலையையும், கழுத்தையும் ஒரு குகையில் நுழைத்துக் கொண்டது. குகைக்குள் கழுத்தை மட்டுமே நுழைக்க முடிந்தது; உடல் வெளியே இருந்தது.
    அப்போது நரி ஒன்று, தன் துணையுடன் பசியால் களைத்து, மழையிலிருந்து ஒதுங்குவதற்காக அக்குகைக்குள் நுழைந்தது. அதன் பார்வையில், ஒட்டகத்தின் கொழுத்த நீண்ட கழுத்து தென்பட்டது. உடனே நரியும், அதன் மனைவியும் ஆளுக்கொரு பக்கமாக ஒட்டகத்தின் கழுத்தை கடித்து, தின்னத் துவங்கியது. சோம்பேறி ஒட்டகம் இறந்து போனது. தெய்வம் வரம் தந்தாலும், சோம்பேறி அதை நல்ல விதமாக உபயோகப்படுத்திக் கொள்ளாமல், தன்னுடைய சோம்பேறித்தனத்தால் அழிந்து விடுவான் என்கிறார் வியாசர்.


    பி.என்.பரசுராமன்


    விதுர நீதி!: நாம் சத்தியத்தை பின்பற்றினால், நம்முடைய நற்பண்புகள் காப்பாற்றப்படும். அறிவைத் தொடர்ந்து பயன்படுத்தினால், அது குறையாமல் நிலைத்து நிற்கும். உடலை தூய்மையாக வைத்திருந்தால், அழகுடன் மிளிரும். நன்னடத்தையை கடைபிடித்தால், நம் பரம்பரை நிலை பெற்று வளரும்.
    — என்.ஸ்ரீதரன்.
Working...
X