Announcement

Collapse
No announcement yet.

இல்லறத்தான்-துறவியர்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இல்லறத்தான்-துறவியர்

    இல்லறத்தான்-துறவியர்.
    இல்லறத்தாருக்கும், துறவியருக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் உண்டு. துறவியரை ஆதரிப்பது, உதவுவது இல்லறத்தாரின் கடமை. எனவே அவர்கள் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கி வாழ வேண்டியவர்கள்.
    துறவியர் நிலையாக ஒரு இடத்தில் தங்குவதில்லை. நவராத்திரி முதலான நாட்களைத் தவிர, மற்றபடி மூன்று நாட்களுக்கு மேல் ஓரிடத்தில் இருக்கக்கூடாது என்பது சந்நியாச விதி.
    சில நாட்களே ஓரிடத்தில் இருக்க வேண்டிய துறவியர், நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்க வேண்டியிருக்கும். அப்படி தங்கி இருப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொள்வது சாதுர்மாஸ்ய விரத சங்கல்பம். சாதுர் மாஸ்யம் என்றால் நான்கு மாதங்கள் என்று பொருள்.
    ஆடிமாதம் பவுர்ணமி அன்று சாதுர்மாஸ்யம் தொடங்குகிறது. அந்த நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் துறவிகள் இருப்பதற்கான காரணத்தை சாஸ்திரங்கள் சொல்கின்றன.
    -- தினமலர் பக்திமலர். ஜூலை 18, 2013.
Working...
X