Announcement

Collapse
No announcement yet.

மன்னன் குரு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மன்னன் குரு

    கிருத யுகத்தில் வாழ்ந்த சம்வர்ணன் என்ற அரசன் நன்கு வித்யைகளைக் கற்றவன். தன் நாட்டை நல்லமுறையில் ஆட்சி செய்து வந்தான். சில காலம் கழித்து மன்னன் அவையோரிடம்... அவையோரே! நான் சில காலம் ஏகாந்த வாசம் செய்யத் தீர்மானித்துள்ளேன். நமது குரு வசிஷ்டர் ராஜ்ய பரிபாலனம் செய்வார்! நல்ல அரசனைப் பிரிய மனமில்லாத அவையோர் முதலில் மறுப்பு தெரிவித்தனர். முடிவில் மன்னனின் விருப்பத்திற்கிணங்கி அவரை வழியனுப்பினர். வனத்தில் ஒரு குளத்தில் தபதி என்ற பெண் தன் தோழிகளுடன் நீராடிக் கொண்டிருந்தாள். ஆஹா! தாமரை மலர் போன்ற போன்ற இவளை என் மனம் நாடுகிறதே! தபதி சூரிய பகவானின் மகள். இருவரும் ஒருவரையொருவர் விரும்பினர். நாட்டிற்குத் திரும்பிய மன்னன் உற்சாகமின்றி இருந்தான். நம் அரசனுக்கு ஏன் இந்த வாட்டம்? ஓ, தபதியை விரும்புகிறாரோ! சரி. சூரிய பகவானிடம் சென்று ஆவன செய்வோம். வசிஷ்டர் தமது யோகத்தின் மூலம் சூரிய மண்டலத்தை அடைந்தார்.

    சூரியதேவரே, எங்கள் அரசன் சம்வர்ணன் உமது மகள் தபதியை விரும்புகிறார். முனிசிரேஷ்டரே, எவராலும் அண்ட முடியாத சூரிய மண்டலத்துக்கே வந்துள்ள மகிமை மிக்க உங்களது விருப்பத்துக்கு இணங்காமலா! தபதியை சம்வர்ணன் ஏற்கட்டும். தபதி - சம்வர்ணனின் திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கு குரு என்ற மகன் பிறந்து சீரும் சிறப்புமாக வளர்ந்தான். குரு உரிய வயதில் மணம் முடித்து அரியணை ஏறி செங்கோலோச்சி மக்களிடம் நற்பெயர் பெற்றான். யோக கலைகளில் வல்லவனாக விளங்கினான். மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தான் மன்னன். தனது மக்களுக்கு அஷ்டாங்க யோகமாகிய நற்செல்வங்களை வழங்க நினைத்தான் குரு. முதலில் அவற்றை வளர்க்க ஏற்ற இடத்தைத் தேடி பூமியெங்கும் வலம் வந்தான் அரசன். (எட்டுவித யோகங்கள்-தவம், உண்மை, மன்னிப்பு, கருணை, தூய்மை, தானம், யோகம், பிரம்மசரியம்) தனது யாத்திரையின் முடிவில் சரஸ்வதி நதி ஓடிய சமந்தகம் என்ற இடத்தை அடைந்தான். இது புண்ணிய பூமி! இங்கு உழுது அஷ்டாங்க யோகங்களை விதைப்பேன். இவை முளைத்துச் செழிப்பாக வளர்ந்துவிட்டால் இங்கு வரும் மக்கள் அனைவரும் நற்பதவி அடைவார்கள்!

    குரு, சிவபெருமானிடமும் எமதர்மராஜனிடமும் வேண்டி, அவர்களது வாகனங்களைக் கொண்டு அந்த நிலத்தைத் தங்கக் கலப்பையால் உழுதார். அதனைக் கண்ட இந்திரன் குரு மன்னரைப் பரிகாசம் செய்தான். ஏ அரசனே! அஷ்டாங்க யோகத்தையா பயிரிடப் போகிறாய்? நல்ல கூத்து இது! குரு, இந்திரனின் பரிகாசத்தைப் பொருட்படுத்தவில்லை. அப்போது மகாவிஷ்ணு அங்கு தோன்றினார். மன்னா, உன் எண்ணம் நல்லதுதான். ஆனால் யோக விதைகளை விதைக்காமல் பயிர் எப்படி வரும்? பகவானே, என் உடலில் அஷ்டாங்க தர்மங்கள் உள்ளன. பூமியை உழும்போது என் உடல் நசிந்து பூமியில் கலந்துவிடும். அப்போது அந்த தர்மங்கள் முளைக்கும். அதற்கு வெகு காலம் பிடிக்கும். மாறாக, உன் அங்கங்களையே விதையாகக் கொடு. உனக்காக நான் இந்த நிலத்தை உழுகிறேன். தான் சொன்னபடி குரு தன் அங்கங்களை வெட்டி வழங்கினார்.

    சுவாமி ! இதோ ஏற்றுக் கொள்ளுங்கள். வெட்டுண்ட என் அங்கங்களிலிருந்து யோக விதைகள் முளைக்க அருள் புரியுங்கள்! மக்களுக்காக மன்னன் குரு செய்த தியாகத்தை மெச்சி மகாவிஷ்ணு அவனை ஆசீர்வதித்தார். உடனே, குரு வெட்டுண்ட கை கால்களைத் திரும்பப் பெற்றான். ஓ ராஜனே! இனி இந்தத் தலம் உன் பெயரால் குரு÷க்ஷத்திரம் என்று அழைக்கப்படும். இது தர்ம÷க்ஷத்திரமாகவும் விளங்கும். இன்று முதல் நானும் மற்ற தேவர்களும் இதனைக் காவல் காப்போம். இங்கே யுத்தத்தில் மடிந்தவர்களுக்கு சுவர்க்கத்தில் இடம் கிடைக்கும். மகத்தான காரியத்தைச் சாதித்த குரு அரசன் சுவர்க்கம் சென்றடைந்தான். குரு÷க்ஷத்திரம் இப்படியான ஒரு தர்ம பூமி என்பதால்தான் கவுரவர்களும் பாண்டவர்களும் இங்கே தர்மயுத்தம் செய்தனர்.

    சுடுகாட்டு சித்தன்
Working...
X