Announcement

Collapse
No announcement yet.

மொபைல் மூலம் கணிணியை இயக்க :

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மொபைல் மூலம் கணிணியை இயக்க :

    மொபைல் மூலம் கணிணியை இயக்க : OPERATE YOUR SYSTEM VIA MOBILE !
    பெரும்பாலும் இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும். பெரும்பாலனோர் கணினியில் Team Viewer பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதை உங்கள் ஆண்ட்ராய்ட் போனுக்கும் பயன்படுத்த இயலும். TeamViewer நிறுவனம் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு ஒரு அப்ளிகேஷன் தயாரித்து கூகிள் பிளே ஸ்டோரில் சேர்த்து இருக்கிறார்கள். எனவே இந்த ஆப்ஸ் மூலம் உங்கள் கணினியை கட்டுப்படுத்தலாம். மேலும் இந்த ஆப்ஸ் ஆப்பிளின் ஐஒஸ்(iOS) ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது. ஐஒஸ் பயன்பாட்டில் உள்ள ஐபோன், ஐபாட் போன்றவற்றில் இயங்கும். எனவே இந்த ஆப்ஸ் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கும் ஐஒஸ் ஆப்பிள் சாதனம் பயன்படுத்துபவர்களுக்கும் பயன்படும்.

    இதனால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினியை தொடர்பு ஏற்படுத்தி மொபைலில் இருந்துக்கொண்டே கணினியில் வேலைகளை செய்யலாம். ஆனால் இந்த மொபைல் டீம்விவரில் ஒரு சில வேலைகளை செய்யமுடியாது, குறிப்பாக பைல்களை அனுப்ப (File Transfer) முடியாது.


    இந்த ஆப்ஸ் மூலம் ஆன்லைனில் இருக்கும் Team Viewer பயன்படுத்தும் நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயக்க முடியும். கீபோர்டை எளிதாக பயன்படுத்தும் முறையில் இருப்பதால் சிறப்பான ஆப்ஸ் என்றே சொல்லலாம்.

    முதலில் உங்கள் கணினியில் அண்மையில் வெளிவந்த Team Viewer பதிப்பு 9 Download Here தரவிறக்கிகிக்கொள்ளுங்கள். இதனால் பதிப்பு ஒத்திசைவு (Version Compatibility) சரியாக இருக்கும், ஏனென்றால் இந்த டீம்வீவர் ஆப்ஸ் அவ்வப்போது மேம்படுத்திக்கொண்டே இருப்பார்கள். கணினியில் தரவிறக்கம் செய்து முடித்தபின் கணினியில் நிறுவுங்கள்.

    அடுத்து உங்கள் மொபைல் மூலம் இந்த பதிவின் கீழே உள்ளே கூகிள் பிளே விட்கெட்டில் இருந்து புதிய டீம்வீவர் ஆப்ஸ் தரவிறக்கிக்கொள்ளுங்கள். ஆப்ஸ் தரவிறக்கி தானாகவே நிறுவிக்கொள்ளும். பின்னர் கணினியிலும் மொபைலிலும் டீம்வீவரை திறந்துக்கொண்டு கணினியில் உள்ள ஐடி மற்றும் கடவுச்சொல்லை மொபைலில் அடித்து கனெக்ட் செய்தால் சிறிது நேரத்தில் இணைப்பு கிடைக்கும்.

    இனி நீங்கள் மொபைலில் இருந்துக்கொண்டு கணினியில் செயல்பாடுகளை கவனிக்கலாம், முடிந்தளவுக்கு அனைத்தும் செய்யலாம்.

    Friday, July 11, 2014

    - See more at: http://satheeshonline.blogspot
Working...
X