நீர்வழித் தடமான, ' கால்வாய் ' என்பது ஆங்கிலத்தில் CANAL, மற்றும் CHANNEL என்ற வார்த்தைகளால் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா ? CHANNEL என்பது இயற்கையாக உருவான கால்வாயைக் குறிக்கும். உதாரணத்திற்கு, ஆங்கிலக் கால்வாய் மற்றும் மொசாம்பிக் கால்வாய்.( Mozambique Channel ). CANAL என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட கால்வாயைக் குறிக்கும். உதாரணத்திற்கு, பனாமா கால்வாய் ( Banama Canal ).
-- க.ஓவியா, சாரம், புதுச்சேரி.
பரபரப்பான விமான நிலையம் !
உலகில், மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில், சிக்காகோவின் ' ஓ 'ஹரே பன்னாட்டு விமான நிலையம் ( O' Hare International Airport ) முக்கியமானது. இங்கே, ஒவ்வொரு 42 நொடிகளுக்கும் விமானங்கள் பறந்து செல்வதும், இறங்கி வருவதுமாக இருக்கின்றன. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2,000 விமானங்கள். 2012 -ம் ஆண்டு கணக்கின்படி, ஆறு கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் இங்கே வந்து சென்றுள்ளனார்கள்.
-- ஆ.சு.ஜீஜீ, சென்னை - 11.
-- சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ். சுட்டி விகடன்.30 -09- 2013.