Announcement

Collapse
No announcement yet.

துளி...துளி...

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • துளி...துளி...

    * ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரம்னு கேட்டால் 24 மணி நேரம்னு சொல்வோம். உண்மையில் ஒரு நாள் என்பது 23 மணி, 56 நிமிடம், 4 நொடிகள்
    மட்டுமே.
    * விண்வெளியில் ஆக்ஸிஜன் இல்லாததால் அங்கே உயிர்வாழ முடியாதுன்னு உங்களுக்குத் தெரியும். ஆனால், விண்வெளியில் உயிர் காக்கும்
    உபகரணங்கள் இன்றி 2 நிமிடங்கள் வாழ முடியும்.
    * காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததே இல்லை. பிரிட்டனுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் கப்பலில்தான் பயணித்திருக்கிறார்.
    * ஊர் பெயர்களை மனிதர்களுக்கு வைப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்துக்கு
    விலங்கின் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். அந்த ஊரின் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதாம். அப்படி என்ன பெயரா? டை நோசர்!
    * நாலா பக்கமும் கையை, காலை நீட்டிக்கிட்டு அவ்ளோ பெருசா இருக்கிற ஆக்டோபஸ் , பிறக்கும்போது ஒரு ஈ அளவில்தான் இருக்கும்.
    * பாலைவனம்னாலே கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் மணல்தானே இருக்கும். ஆனால், பெரு நாட்டில் உள்ள செக்கரா பாலைவனத்தில் மணலே
    இல்லை. மலை மேடு போலவே காட்சியளிக்கும்.
    -- டி.கே. மாயாபஜார். குழந்தைகளின் குதூகல் உலகம். சிறப்புப் பகுதி.
    -- ' தி இந்து 'நாளிதழ் புதன்,. அக்டோபர் 9, 2013.
Working...
X