[img]
http://img.dinamalar.com/data/uploads/E_1404977723.jpeg[/img]
கொடுக்க கொடுக்க வளர்வது கல்வி மட்டுமல்ல, தானமும் தான். இறை வழிபாட்டோடு, தானம் கொடுப்பதையும் கடை பிடித்தால், நம் கர்ம வினைகளிலிருந்து மீண்டு, முக்தி பேற்றை அடையலாம் என்பதற்கு, மகாபலி சக்கரவர்த்தியின் கதையே சான்று.
மகாபலி முற்பிறப்பில், பெண் பித்து கொண்டவனாகவும், முன்கோபியாகவும், எல்லாவகையான கெட்ட நடத்தை கொண்டவனாகவும் இருந்தான். ஒரு நாள் அவன், கிண்ணத்தில் சந்தனத்தையும், வாசனை மிகுந்த மாலையையும் எடுத்துக் கொண்டு, விலை மாது வீட்டை நோக்கி, சென்று கொண்டிருந்தான்.
அப்போது, கல் தடுக்கிக் கீழே விழுந்தவன், அடிபட்டு, தெருவில் மயங்கிச் சரிந்தான். அவனை யாரும் கண்டு கொள்ளவில்லை. பின், சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தவனுக்கு, விலைமாது மீது இருந்த மோகம் குறைந்து, தன் மீதே வெறுப்பு வந்தது. அந்நிலையில், அவன் பார்வையில், ஒரு சிவலிங்கம் தென்பட்டது. கையில் இருந்த சந்தனத்தை சிவலிங்கத்தின் மீது பூசி, மாலையைச் சார்த்திவிட்டு, வீடு திரும்பினான்.
காலகிரமத்தில் அவன் மரணமடைய, அவனை யமலோகத்தில் நிறுத்தினர் யமதூதர்கள்.
அவனின் பாவ, புண்ணிய கணக்கை பார்த்த சித்ரகுப்தன், 'நீ செய்த பாவங்களுக்கு, அளவே கிடையாது; அத்துணை கொடும் பாவங்களை செய்துள்ளாய். ஆனால், சிவலிங்கத்திற்கு சந்தனம் பூசி, மாலை சாற்றிய ஒரே ஒரு புண்ணியம் மட்டும் உள்ளதால், அந்த புண்ணிய பலனாக, இந்திர பதவியில், மூன்று நாளிகை (72 நிமிடங்கள்) நேரம் இருக்கலாம்...' என்றான்.
அதைக் கேட்டதும் அவன், 'முதலில் புண்ணியப் பலனை அனுபவித்து விடுகிறேன்; அதன்பின், நரக தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்...' என்றான்.
அதனால், அவனை இந்திரப் பதவியில் அமர்த்தினர்.
கொடும்பாவியான அவன், தானம் கொடுப்பதன் மகிமையை உணர்ந்து விட்டதால், மனதை, இந்திர போகங்களை அனுபவிப்பதில் செலுத்தாமல், அந்தப் பதவியில் இருந்த சிறிது நேரத்தில், தான - தர்மங்கள் செய்யத் தீர்மானித்தான். உடனே, இந்திர லோகத்தில் இருக்கும் காமதேனு உச்சைசிரவஸ், ஐராவதம், சிந்தாமணி, கற்பக விருட்சம் என அனைத்தையும், முனிவர்களுக்குத் தானமாகக் கொடுத்து விட்டான்.
குறிப்பிட்ட மூன்று நாழிகை நேரம் முடிந்ததும், யமதர்மனின் முன் நின்று, 'புண்ணியப் பலனை அனுபவித்து விட்டேன்; நரகத்தை அனுபவிக்க தயார்...' என்றான்.
அதற்கு யமதர்மன், 'இந்திரப் பதவியிலிருந்த போது, நீ செய்த தானத்தின் பலனாக, உனக்கு நரக வாசம் போய், ஏராளமான புண்ணியத்தை அடைந்து விட்டாய். அதனால், அப்புண்ணியத்தின் பலனாக, கொடைவள்ளலான விரோசனனின் மகனாக மகாபலியாகப் பிறப்பாய்...' என்ற, வரத்தைக் கொடுத்து விட்டார்.
அதன்படியே, அவன் மகாபலியாக பிறக்க, அந்த மகாபலியிடம் தான், வாமனர் வந்து, மூன்று அடி மண் கேட்டார்.
தானத்தின் மகிமையை விளக்குவதற்காக சொல்லப்படும் கர்ண பரம்பரை கதை இது. தானம் கொடுப்பவர்கள், புண்ணியத்தை, கொடுத்து வைப்பவர்கள். அவ்வாறு கொடுத்து வைப்போருக்கு தான், வட்டியும் முதலுமாக எல்லாமே திரும்ப கிடைக்கும். அதனால், நாமும் இயன்றவரை, அடுத்தவர்களுக்கு கொடுத்து வைப்போம்.
பி.என்.பரசுராமன்
விதுர நீதி!: கர்வம் நிறைந்தவர்கள், அறிவிலிகள், கோபாவேசப்படுவோர், அவசரப்படுபவர்கள், முன் யோசனை அற்றவர்கள், நற்பண்புகள் அமைய பெறாதவர்கள், ஆகியோருடன் நட்புக் கொள்வதை, புத்திசாலி தவிர்த்து விட வேண்டும்.
— என்.ஸ்ரீதரன்.
Courtesyinamalar