கஸ்தூரி மான் பற்றி ஒரு செய்தி சொல்வார்கள். அபரிமிதமான வாசனையைத் திடீர் என்று அது உணரும். எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் தேடித் தேடி வெறிபிடித்தபடி அங்கும் இங்கும் ஓடும். பைத்தியம் பிடித்தமாதிரி ஓடி ஓடி களைத்து முடியாமல் விழும். முடிவில் சாகும் போது ஓர் உண்மையைக் கண்டுபிடிக்கும். அதனிடமிருந்து சுரக்கும் ஒரு திரவமே இத்தனை வாசனைக்கும் காரணம். அது தெரியாமல் ஓடியதும் தேடியதும் எத்தனைபைத்தியக்காரத்தனம். இந்தக் கஸ்தூரி மான் கதைதான் நமது வாழ்க்கையும், நம்மிலிருந்து பிறக்கும் எண்ணங்களே நமது பெருமைக்கும் முன்னேற்றத்திற்கும் காரணம்.
-- எழுதியவன் பேசுகிறேன், தலையங்கத்தில்...வாழ்ந்து பார்க்கலாம் வா ! நூலில்.
-- சுகி.சிவம்.
-- எழுதியவன் பேசுகிறேன், தலையங்கத்தில்...வாழ்ந்து பார்க்கலாம் வா ! நூலில்.
-- சுகி.சிவம்.