மங்களாவரம் மலையில் ஆடுமேய்த்த ஒரு சிறுவன் ஒரு இடத்தில்
அதிசயமான தெய்வீக விக்ரகத்தைக் கண்டு காகாதிய மன்னரிடம் சொல்ல,
அதை புனித இடமாகக் கருதிய மன்னர், இங்கு கோட்டை கட்டினார்.
இதனால் இந்த இடத்திற்கு ' மேய்ப்பனின் மலை ' என்ற அர்த்தம் கொண்ட '
கொள்ள காண்டா ' என்ற தெலுங்கு பெயர் வந்தது. பின்னர், கோல்கண்டா
என்று மருவியுள்ளது.
கோல்கண்டா, ஆரம்பத்தில் இந்து மன்னர்களின் ஆட்சியில் தக்காண நாட்டின்
தலைமையிடமாக இருந்துவந்தது. காகாதிய மன்னர்கள் ஆட்சியில் களிமண்
கோட்டையாக இருந்த இந்த மலைக்கோட்டை, பாமினி சுல்தான்கள் ஆட்சியில்
கல் மதில்களுடன் சில மாற்றங்களைப் பெற்றது. பிறகு, குதூப் சாஹி வம்ச
ஆட்சியில் 7 கி. மீ., தூர மதில்சுவர் மற்றும் கிரானைட்
வேலைப்பாடுகளுடன் பிரமாண்ட வடிவம் பெற்றது. அதன்பின்
கோல்கண்டாவைக் கைப்பற்றிய முகலாய சக்ரவர்த்தி அவுரங்கசீப்,
கோட்டையின் பல பகுதிகளை இடித்து புதுப்பித்தார். இப்படி, இந்தியப்
பாரம்பரிய கட்டடக்கலையும் பாரசீகக் கலைநுட்பங்களும் கலந்து மிளிர்கிறது
இந்தக் கோட்டை !
காகாதிய வம்ச மன்னர் கட்டிய காளிகோயில், கோட்டையின் ஆரம்பகால
வரலாற்றுக்கு சாட்சி கூறுகிறது. அனுமதி பெறாமல் பத்ராசலம் கோயில்
கட்டிய பக்த ராமதாஸரை சுல்தான் தானா ஷா சித்ரவதை செய்த சிறை,
இன்னொரு மவுன சாட்சி.
இந்த கோட்டையின் தனிச்சிறப்பு, ' எதிரொலி ' அறைகள். விதவிதமான
கூரை அமைப்புகளால் ஒலியைத் திசைதிருப்பி இந்த அதிசய அறைகளை
அமைத்துள்ளனர். ' கைதட்டல் அறை ' என்ற அறையில் ஒரு குறிப்பிட்ட
இடத்தில் நின்று கை தட்டினால், 24 முறை எதிரொலி கேட்கிறது !
தண்ணீரை கோட்டை பகுதிகளுக்குள் இடமாற்றூவதற்கான நுட்பமான
அமைப்புகள், இன்னொரு பிரமிப்பு. பிரசித்தி பெற்ற கோஹினூர் வைரம்
இருந்த இடம், மார்க்கபோலோ புகழ்ந்து எழுதிய இடம் என்று நீண்டுகொண்டே
போகிறது கோல்கொண்டா மலைக்கோட்டையின் சரித்திரம் !
--- தினமலர் , ஏப்ரல் 11 , 2010.
Posted by க. சந்தானம் at 12:01 PM