Announcement

Collapse
No announcement yet.

லோக்சபா சபாநாயகராகிறார் அத்வானி?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • லோக்சபா சபாநாயகராகிறார் அத்வானி?

    லோக்சபா சபாநாயகராகிறார் அத்வானி? முக்கிய பதவி கேட்டு சுஷ்மா அடம்?

    மாற்றம் செய்த நாள்

    16 மே
    2014
    07:44
    பதிவு செய்த நாள்
    மே 15,2014 21:14

    புதுடில்லி: தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ள நிலையில், தற்போது அத்வானி, சுஷ்மா உள்ளிட்ட சீனியர் தலைவர்களுக்கு எந்த பதவி அளிப்பது என்பது குறித்து பா.ஜ., தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
    மத்தியில் பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. நரேந்திர மோடி தலைமையில் புதிய ஆட்சி அமைப்பது குறித்தும், ஆட்சியில் பங்கேற்கும் புதிய அமைச்சர்கள் குறித்தும் தற்போது தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவரான அத்வானி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு எந்த பதவி வழங்குவது என்பது குறித்து இன்னும் தெளிவான முடிவுக்கு பா.ஜ., வரவில்லை என கூறப்படுகிறது.

    லோக்சபா சபாநாயகர் பதவியை அத்வானி விரும்புவதாக கூறப்படுகிறது. இதே போல், கட்சியின் மற்றொரு சீனியரான சுஷ்மா சுவராஜ், உள்துறை, நிதி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை என நான்கில் ஒரு துறையை கேட்பதாக கூறப்படுகிறது. இதை விடுத்து மற்ற துறையை ஏற்க அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சுஷ்மாவை சமாதானப்படுத்த, அத்வானியின் உதவியை ராஜ்நாத் சிங் நாடியுள்ளார்.

    இதனிடையே, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களை பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் இன்று சந்தித்து பேசினார். அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராக சோனியா இருந்து ஆட்சியை வழிநடத்துவது போல, அத்வானிக்கும் ஒரு பொறுப்பு அளிப்பது குறித்து ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.

    Source: Dinamalar
Working...
X