Announcement

Collapse
No announcement yet.

மீண்டும் நிரூபணமான கன்னியாகுமரிசென்டி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மீண்டும் நிரூபணமான கன்னியாகுமரிசென்டி

    நாகர்கோவில் : கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெறும் கட்சிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற சென்டிமென்ட் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
    கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெறும் கட்சிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்பது சென்டிமெண்ட். 1956-ல் கன்னியாகுமரி மாவட்டம் உருவான பின்னர், 1972-வரை நடைபெற்ற எல்லா தேர்தல்களிலுமே இங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது. மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. 1977-ல் ஜனதா கட்சியின் அங்கமான ஸ்தாபன காங்கிரஸ் இங்கு வெற்றிபெற்ற போது மத்தியில் ஜனதா ஆட்சி ஏற்பட்டது. அதன் பின்னர் 1998-ல் இங்கு த.ம.கா வெற்றி பெற்ற போது மத்தியில் அமைந்த வாஜ்பாய் ஆட்சி குறுகிய காலத்திலேயே கவிழ்ந்தது. 1999-ல் இங்கு பா.ஜ., வெற்றி பெற்ற போது மத்தியில் வாஜ்பாய் அரசு 5 ஆண்டு காலம் நீடித்தது. 2004-ம் ஆண்டு தேர்தலில் காங்கிஸ் கூட்டணிகட்சிகளான மா.கம்யூ.,கட்சியும், 2009-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வும் வெற்றிபெற்றபோது மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுதான் அமைந்தது. தற்போது பா.ஜ., வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைவதன் மூலம் கன்னியாகுமரி சென்டிமெண்ட் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
Working...
X