* சுவாமிப் படங்களை சாதாரண நீர் கொண்டு துடைக்காமல், பன்னீர் கலந்த நீரினாலோ அல்லது கற்பூரம் கரைத்த நீரினாலோ துடைத்தால் பூச்சி அரித்து வீணாகாமல் நீண்டநாள் பாதுகாக்கலாம்
* வறுத்த தேங்காய்த் துருவல், ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் தூளாக்கி, அத்துடன் நன்கு வறுத்த சேமியாவைப் பொடியாக நொறுக்கிப் போட்டு, வறுத்த முந்த்ரியையும் ஒடித்துப் போட்டுக் கலந்து வைத்துக் கொண்டால், விருந்தினர் வந்ததும் கொதி நீரில் ஒரு கரண்டி எடுத்துப் போட்டுக் கிளறி, சூடான பாலும் ஒரு ஸ்பூன் நெய்யும் விட்டுக் கலந்து சட்டென்று நிமிடத்தில் பாயசம் செய்து விடலாம் .
* பாத்ரூம் டைல்ஸ்களில், பாத்திரம் துலக்கும் பவுடருடன், கோலமாவைக் கலந்துத் தூவி ஊற வைத்துக் கழுவவும் . பளபளப்பு கூடுவதோடு வழுக்கவும் வழுக்காது
* சேப்பங்கிழங்கை எப்படிச் சமைத்தாலும் வழுவழுப்பு போகாது . கிழங்கை வேக வைத்துத் தோல் உரித்து, ஃபிரிஜ்ஜில் 2 மணி நேரம் வைத்து, பொரித்தால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் மொறு மொறுப்பாக இருக்கும்