நியாயக்களஞ்சியம்
--- கவியரசு கு. நடேசகவுண்டர் .
எவ்வெச் சமயத்தில் பெண்டிரைப் பிறர் காண்பது குற்றமாகாது : நியாயம் .
இராமன் , சீதை இலக்குமணனுடன் காட்டிற்குச் செல்ல அயோத்தி வீதியில் நடக்கும்போது , நகர மக்கள் நீர் பொழியும் கண்ணீனராய் வழியை அடைத்து நின்றனர் . அப்போது இராமன் சீதையை நோக்கி , " மைதிலி உன் முக்காட்டினை நீக்குக " என்று பணித்தான் . அவளும் அங்ஙனமே செய்தாள் . பின் , நகர மக்களை நோக்கிப் , " பெருமக்களே என் மனைவியை , நீர் நிறைந்த உமது விழிகளால் தடையின்றிப் பார்த்துக் கொள்ளுங்கள் ; மகளிரை வேள்வியிலும் , திருமணத்திலும் , ஆபத்திலும் , காட்டிலும் பார்ப்பது குற்றமாகாது " என்றான் .
கரி நியாயம் ( அங்கார நியாயம் ) :
கரியைக் கையிலெடுத்தால் அது சூடுடையதாய் இருக்கும் போது சுட்டுப் புண்ணாக்குகின்றது . குளிர்ந்திருக்கும் போது சுடாவிடினும் கையை மாசுபடுத்துகிறது . எனவே , அது எந்நிலையிலிருப்பினும் அதன் கூட்டுறவால் தீமையே விளைகிறது . தீயோர் கூட்டுறவும் அத்தகையதே

கழுதைக் குரல் ( ராய பருத நியாயம் ) :
கழுதையின் குரல் தொடக்கத்தில் பெரிதாகவே தொடங்கி உச்சத்துக்குச் சென்று பின் இறங்கி மத்யமமாகிப் படிப்படியே இறங்கி அடங்கிவிடும் . கீழோர் அன்பும் பெரிதாகவே தொடங்கி வளர்ந்து பின் படிப்படியாய்த் தேய்ந்து பின் இல்லயாகும்