Announcement

Collapse
No announcement yet.

Wine& ardra darshan-spiritual story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Wine& ardra darshan-spiritual story

    Wine& ardra darshan-spiritual story
    சிவாயநம திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    ___________________________________


    *மது ஒழிக!, மார்கழி வாழ்க!!*
    (இது குழுவுக்கு அவசியமற்ற பதிவு என எண்ணத் தோன்றும். முழுவதையும் வாசியுங்கள்.)
    ___________________________________
    அது என்ன?, மது ஒழிக!, மார்கழி வாழ்க! புரியலையா?


    முதலில் மார்கழியைப் பார்ப்போம்.


    *மார்கழி வாழ்க!*
    மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை திருவிழாவை மிகவும் சிறப்பாக நாம் கொண்டாடி வருவோம்.


    இது எதனால் தெரியுமா?


    சோழ நாட்டின் தலைநகர் காவிரிப்பூம் பட்டினத்தில், சாதுவன் என்ற ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தான்.


    இவன் பொன் பொருட் செல்வத்தில், பெரிய பணக்காரன். இவனது மனைவியின் பெயர் ஆதிரை. கற்புக்கரசி.


    திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்தி வந்தான் சாதுவன்.


    ஒரு சமயம், தனியாக நாடகத்திற்குச் சென்றிருந்தபோது, அதில் நடித்த நடிகையின் அழகைக் கண்டு மயங்கினான்.


    அம்மயக்கம், அவள் மீது காதல் கொள்ளச் செய்தது. ஆதலால் அவளது வீட்டிலேயே இவன் தங்கி இருந்து விட்டான்.


    அந்த நடிகையோ, சாதுவனின் வசதியைத் தெரிந்து கொண்டு, பணம், பொருளைப் பறித்துக் கொண்டிருந்தாள்.


    ஒருகாலகட்டத்தில், அவனுக்கு வசதிக் குறைவு ஏற்படவும், அவனை விட்டு பிரிந்து சென்று விட்டாள்.


    மனைவிக்கு துரோகம் இழைத்ததால்தான், தனக்கு இந்தக் கதி ஏற்பட்டு விட்டது என்று எண்ணி வருந்தினான் சாதுவன்.


    வீட்டிற்குத் திரும்பிப் போகவும் அவன் மனம் இடங்கொள்ளவில்லை.


    இழந்த பொருளுக்கு ஈடாக பொருளை ஈட்டிய பின்னரே, தான் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.


    அதற்காக சம்பாதிக்கும் வழிகளை அலசி ஆராய்ந்தான்.


    அந்தநேரத்தில், வங்கதேசத்திலிருந்து வியாபாரிகள், காவிரிப்பூம் பட்டிணம் வந்திறிங்கினார்கள்.


    அவர்களுடன் சாதுவன் இணைந்து, வியாபார நுணுக்கங்கள் குறித்து சாதுவன் பேசினான்.


    சாதுவனின் யோசனைகள் வியாபாரிகளுக்குப் பிடித்துப் போய்விட்டது. சாதுவனை தங்களுடனே கூட, பாய்மரக்கப்பலில் அழைத்துச் சென்றனர்.


    கப்பல் சென்று கொண்டிருந்த போது, பயங்கரப் புயல் அடித்தது.


    கப்பல் கவிழ்ந்தது.


    கப்பலில் வந்த வியாபாரிகள் பலர், கடலில் மூழ்கி இறந்து போயினர்.


    சாதுவனும் கப்பலிலிருந்து தூக்கி வீசப்பட்டு, கப்பல் உடைந்து கடலில் மிதந்த பாகங்களில் ஒன்று மிதந்திருக்க, அதனைப்பற்றிக் கொண்டு உயிரைக் காப்பாற்ற மிதந்தான்.


    உடைந்த கப்பல் பலகையின் ஒன்றின் மீதேறி படுத்துக் மிதந்து கொண்டு, யாராவது கடல்வழிப் பயணமாக உதவிக்கு வரமாட்டார்களா? என்று பார்த்து மிதந்து கொண்டிருந்தான் சாதுவன்.


    நான் இப்போது இறந்து போனால், மனைவியிடம் தனக்கு உண்டான கெட்ட பெயர் அப்படியே நிலைத்து நின்று விடுமே? என நினைத்து நினைத்து வருந்தினான்.


    இவனின் மனைவி ஆதிரையோ, ஈசன் மீதும், கணவன் மீதும், நீங்காத பெரும் அன்பு கொண்டிருந்தவள்.


    கணவன் எங்கே இருந்தாலும் நல்லபடியாக இருக்கட்டும் என்று, தினமும் ஈசனிடம் வேண்டிக் கொள்ளாத நாளே இல்லை.


    இது, நம் தமிழ்நாட்டுப் பெண்களின் பண்பாடும் அதுதானே!.


    ஆதிரை பிரார்த்தனையின் பயனாக, சாதுவன் படுத்திருந்த பலகை பாதுகாப்பாக ஒரு ஓரமாக கரை ஒதுங்கியது.


    சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில் மூழ்கிப்போன செய்தியும் ஆதிரையின் செவிக்கு எட்டியது.


    கணவன் இறந்து விட்டான் என முடிவு செய்த ஆதிரை, அவரின்றி நான் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை என அழுது புலம்பி, தீ மூட்டி உயிர் துறக்க முடிவெடுத்தாள்.


    இறைவா!" அடுத்த பிறவியிலும் என் கணவரே எனக்கு கணவராக வர வேண்டும் என்று வேண்டியபடி தீயினுள் புகுந்து குதித்தாள்.


    அக்னிப் பிழம்புகள் அவளை ஒன்றும் செய்யவில்லை.


    அவள்தான் கற்புக்கரசியாயிற்றே, ஆதலால் அவளைத் தீ சுட்டுணர்த்தவில்லை.


    ஐயோ!, நெருப்பு கூட என்னைத் தீண்ட முடியாத பாவியாகிப் போனேனே!" என மேலும் கதறி கதறி அழுதாள்.


    *ஆதிரை!------------"*


    அப்போது வானிலிலிருந்து ஒரு அசரீரி.......


    அம்மா ஆதிரையே! கவலை வேண்டாம், உன் கணவர் உன்னிடம் வந்து சேர்வார் என்றுது.


    அங்கோ..... கரையில் ஒதுங்கிய சாதுவனைக் கண்ட அந்நாட்டுக் காவலர்கள், சாதுவனை அழைத்துக் கொண்டு போயினர் அந்நாட்டு அரசனிடம்.


    அரசனிடம், தன் கதை முழுவதையும் எடுத்துரைத்தான் சாதுவன்.


    பின் அவனுக்கு உணவைக் கொண்டு வரச்சொல்லி விட்டு, இதலில் இதைக் குடி என்று மதுவைக் கொடுத்தான் அரசன்.


    சாதுவன் மதுவை அருந்த மறுத்தான்.


    மது அருந்தும் பழக்கத்தாலே, தனக்கு ஏற்பட்ட தீமைகளை விளக்கிச் சொன்னான் சாதுவன்.


    ஆனால் அரசரோ, நாம் மகிழ்ச்சியான குதூகலத்துடன் இருப்பதற்காகத்தானே கடவுள் மதுவைப் படைத் திருக்கிறார்.


    அப்படிப்பட்டதை ஏன் சாப்பிட மறுக்கிறாய்? ம்.. சாப்பிடு என்றார்.


    அரசே… மதுவின் மயக்க பழக்கத்தால் அது விளைவித்த பயனால், நான் தாலி கட்டிய மனைவியை விட்டுப் பிரிந்து, தாலிகட்டிக் கொள்ளாத நடன மாதுவிடம் சென்று சிக்கிச் சீரழிந்தேன்.


    தாலி இல்லாத வாழ்க்கையுடன் இருந்த அவளோ என்னிடமிருந்து பொன், பொருள் அபகரித்து, வசதி குறையவும் என்னைவிட்டு அகழ்ந்து சென்று விட்டாள்.


    அந்த மதுவினாலே மானத்தையும் இழந்தேன். குடும்பத்தை இழந்தேன். பொன் பொருளை இழந்தேன். நிம்மதியை இழந்தேன். கற்புக்கரசியான என் மனைவியைப் பிரிந்தேன் என்றான்.


    குடும்பக் கெளரவுமும், தன்மானமும் நீங்கிப் போகும். இதை என் அனுபவம் எனக்கு உணர்த்தியது என்று மதுவின் தீமையை எடுத்துக் கூறினான் அரசனிடம்.


    இதைக்கேட்ட மன்னரும் மனம் திருந்தினான். மது பழக்கத்தை ஒழிக்க ஆணை பிறப்பித்தார்.


    அவரது உதவியுடன் நாடு திரும்பிய சாதுவன், மனைவியிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ்ந்தான்.


    அந்தக் கற்புக்கரசியானயானவளே ஆதிரை. அந்த ஆதிரையே திருவாதிரை நட்சத்திரமாக வானமண்டலத்தில் மிளிர்கிறாள்.


    சிவபெருமான் அதை, தன் நட்சத்திரமாக ஏற்றதுடன், அந்நாளில் மகிழ்வுடன் நடனமாடி, நடராஜர் எனும் திருநாமமும் பெற்றார்.


    *மது ஒழிக:*
    மது குடிப்பதால், சந்தோஷமாக இருப்பதாக மனம் நினைவு படுத்தும். ஆனால் மது, மனத்தை தடுமாறச் செய்யும்.


    புத்தி சிந்திக்கும் திறனையெல்லாம் அது அழிக்கும். சண்டை செய்ய சண்டாளனையெல்லாம் உருவாக்கும்.


    சில சமயங்களில் அது கொலை செய்யத் தூண்டும் அளவுக்குக் கூட போய்விடுவதுண்டு.


    இம்மது மயக்க பழக்க வழக்கத்தினால்தான் இன்றும் நம் தமிழ் நாட்டில் சீரழிவுச் செயல் அதிகமாக நடந்து கொண்டு வருகிறது.


    இதனால், வீட்டை மறந்து, தாலிகட்டிய மனைவியை பிரிந்து, தவிர பிற பெண்களுடனும் உறவு கொள்ள தூண்டுதல் செய்யும் பேய் ரசம் இது.


    இதன் விளைவாக நிறைந்து இருந்த பொருள் முழுவதும் இழக்கும் நிலையே உருவாகும்.


    இம்மதுவினால், தமிழகத்தில் பல பேருடைய வாழ்க்கை சீரழியும் நிலை நடைமுறையில் இருக்கிறது.


    ஒருவர் தன் வருமாணத்தில் தினக்கூலியாகக் கிடைக்கும் கால்பகுதியை, மதுவிற்கே செலவழிக்கின்றனர். உடலுறுப்புகள் கெடும் நிலையை சேர்த்து சேர்த்து வைத்து வருகின்றனர்.


    1947, ஆகஸ்ட்-ல் ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டுச் செல்லும்போது நில வருவாய்க்கு அடுத்தபடியாக குடி மூலமான வருவாயே இந்தியாவில் பிரதானமாய் இருந்தது.


    இவை எல்லாம் கடந்தகால வரலாறுகள் மட்டுமல்ல, இன்றைய அரசாங்கத்தில் இது நிஜமும் கூட.


    குடி மூலமாக வருவாயைப் பெருக்குவதும், மக்களை மதுவுக்கு அடிமையாக்கி சிந்திக்க விடாமல் தடுப்பதும், ஊழல் அரசுக்கு எதிராக அவர்கள் அணிதிரண்டு போராடாமல் பார்த்துக் கொள்வது மது முக்கிய பங்கு வகிக்கிறது.


    சாணக்கியர் வகுத்த 'அர்த்த சாஸ்திர சாராம்சமும் இதைத்தான் உரைக்கிறது.


    இந்த மது அடிமையிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கு, மருந்தில்லா மருத்துவம் ஒன்று இருக்கிறது.


    அது சிவ வழிபாடு ஒன்றே!


    ஒவ்வொருவரும், ஒவ்வொருவரையும் சைவம் சார்ந்த சிவத்தை அவர்களுக்கு உணரச் செய்ய வேண்டும்.


    கலி இது. கொஞ்சம் கடுமையாகத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்.


    இப்போது நமக்குள்ளேயே நம்மவர் ஒருவர், வேறொருவராக ஆதிக்கதிகாரம் என்று மதியிழந்த செயல் புரிகிறார்.


    இப்படியானவாக இருந்தால் சைவம் எழுச்சியை எப்படித் தக்க வைக்க முடியும்?


    ஈசனிடம் உருகி விண்ணப்பதைத் தவிர எந்த சக்தியும் இல.....


    அக்காலத்தில், சைவத்தை தழைக்கச் செய்வதற்காகவே, தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என ஈசனிடம் விண்ணப்பித்துப் பணிந்தார் சிவபாதவிருதயர்.


    அதன்படியே நமக்கு உதித்தவர்தான் *திருஞானசம்பந்தர் பெருமான்* அவர்கள்.


    தந்தை எண்ணத்தைவிட இவருக்கு, பலகோடி மடங்கு அளவிற்கு சைவ எழுச்சிக்கு கடமையெடுத்து பக்தி வழியை மேற்க்கொண்டார்.


    அந்த சமயத்தில் சமணம் பரந்து விரிந்திருந்த காலமது.


    வெறுமையான அச் சமண மதத்தை எதிர்த்து, ஈசன் மீது நம்பிக்கையுணர்வுகளைக் கொண்டு சைவத்தை வளர்த்தார்.


    இன்றோ, மதுவுக்குள் மூழ்கியிருப்பவர்களை, அதிலிருந்து விடுக்கச் செய்து வெளிக்கொணர யாராலும் முடியவில்லை.


    முன்பு அடியேன், கட்டிடப் பணிபுரியும் பலரிடம் சைவத்தை விரித்துரைத்து, உருத்திராட்சம், சிவநூல்கள் போன்றவற்றை அளித்து, முதலில் சிவபக்தராக ஆகுக என ஆகச் செய்தோம்.


    இதனால் அனேகர் பலரையும் சைவத்துள் பயணிக்க வைத்திருக்கிறோம்.
    ருத்திராட்சம் அணிய வைத்திருக்கிறோம். இன்று அப்படி மாற்றுவது சிரத்தையாக உள.


    மாற்றனானவன் மாறாமல், மாற்றக்கூற மாறுதலில்லை எனவாகிவிட்டது.


    நாடு, வல்லராசாகனும் என பரந்தமனப்பான்மையுடனான நினைப்பு மட்டும் அனைவருக்கும் இருக்கிறது.


    ஆனால், இதிலெல்லாம் கடையொழுகமாட்டோம் என்றால்? எப்படி.


    பக்தி, ஒழுங்கு, ஒழுக்கம், முதலில் இருந்தால்தானே முடியும்!. இதற்குள் பயணிக்க சிவநெறியைப் பற்றிக் கொண்டு வாழமுனைய வேண்டும்.


    ஆண்களே மதுவும், பிற பெண்களுடனான உறவும் வேண்டாம்.


    அது, உங்கள் பொருளையும், மானத்தையும் அழிக்கும்.


    பெண்களே… தவறு செய்யும் கணவரைப் பொறுமையுடன் திருத்துங்கள்.


    வாழ்க்கை இனிக்கட்டும். இதற்கு வேண்டுதல் செய்கிறோம்.


    சைவம் சாருங்கள். அடியார்கள் ஒவ்வொருவரும், அடியார் அல்லாதவரை சிவத்தை உணரச் செய்யுங்கள்.


    பக்தியுடன் ஆலயம் செல்லத் துணியச் செய்யுங்கள். ருத்ராட்சம் அணிவிக்கச் செய்யுங்கள்.


    ருத்ராட்சம் அணிய வெட்கமாக இருக்கிறது என்பர் சிலர்.


    துணிந்து அணியுங்கள். வெட்கமாக இருந்தால் சட்டை மேல்பட்டனை பூட்டுங்கள் என முதலில் கூறி அணியச் செய்யுங்கள்.


    நாளடைவில் அவர்களே, மேல்பட்டனை விடுவித்து கண்டமணியை (ருத்ராட்சத்தை) வெளிக்காட்டத் துணிவார்கள்.


    அடியேன் இதுவரை, நூற்றிப்பதினாறு மதுப்பழக்கத்திலுள்ளோரை , மது பழக்கத்திலிருந்து நீங்கச் செய்து, ருத்ராட்சம் அணியச் செய்துள்ளோம்.


    இன்றும் அந்த நூற்றிப்பதினாறு பேர்களின் கழுத்தில், கண்டமணி அழகு செய்கிறது.


    சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.
Working...
X