Announcement

Collapse
No announcement yet.

Karma - you cant avoid

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Karma - you cant avoid

    Karma - you cant avoid


    *நாம ஒன்று நினைச்சா தெய்வம் ஒன்று நினைக்குது*


    ( கர்மா) விதி என்பது அதிசயமானது அற்புதமானது.


    நான் சென்ற கோவிலில் சரியான கூட்டம். வரிசையில் நின்றேன். உண்டியல் அருகே வந்தவுடன் ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன்... பலர் பார்க்கும் படி பெருமிதமாக...


    ஆனால் அது சற்று கிழிந்து , வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்த 10 ரூபாய் நோட்டு...


    சரி நம்ம கடவுள் தானே... அவரிடம் செல்லாத நோட்டு ஏதேனும் உண்டோ? வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று ஆறுதல் படுத்திக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தேன்..


    அடுத்த வினாடி... எனக்கு பின்னாடி நின்ற ஒருவர் என் தோளைத் தட்டி ரூ 500 கொடுத்தார்..
    அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை உண்டியலில் போட்டு விட்டு,


    சே எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்..


    பின் பெருமாளை சேவித்து விட்டு , வெளியே வந்தால் அவரும் அருகே நடக்க அவரிடம்..


    சார் நீங்கள் உண்மையிலே க்ரேட் என்றேன்..
    அவர் புரியாமல் எதுக்கு என்றார்...


    கடவுளின் உண்டியலில் ரூ 500 போடுகிறீர்களே எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன்..
    நானா ?
    இல்ல சார் நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து அந்த 500 ரூ விழுந்தது, அதைத் தான் நான் எடுத்துக் கொடுத்தேன்..
    டமார்னு ஒரு சத்தம் (வேற என்ன நெஞ்சு தான்)


    இது தான் கர்மா என்பது!!🥀
Working...
X