Announcement

Collapse
No announcement yet.

Chariot of muruga did not move-why-spiritual story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Chariot of muruga did not move-why-spiritual story

    சிவாயநம திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    *நகர மறுத்த முருகன் தேர்:*
    பதினெட்டாம் நூற்றாண்டில்
    மருந்துவாழ்மலை பகுதியில், (திருச்செந்தூர்) தினசரி அய்யா ஸ்ரீ வைகுண்டர் நடைப் பயிற்சி செய்வது வழக்கமாகக் கொண்டிருந்தார்.


    இந்தப் பகுதியில் ஒருவர் மிகவும் சிரத்தை மேற்க்கொண்டு வேலைகளைக் கவனித்து வந்தார்.


    நடைபயிற்சியின்போது, தினமும் இவரை அய்யா பார்த்துச் செல்வது வழக்கம்.


    மருந்துவாழ் பகுதியில் புதையல் இருப்பதாக அப்போதையவர்களுக்கு தெரிந்தும் தெரியமலுமாக, ஒரு அரசல் புரசல் செய்தி ஏற்கனவே நிலவி வந்தது.


    ஒரு நாள் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இந்த நாடாரை, அய்யா கூப்பிட்டு, உனக்கு நான் ஒரு பெரும் புதையலை எடுத்துக்கொடுத்தால் என்ன செய்வாய்? என்று கேட்டார்.


    நீங்கள் என்ன செய்யக் கூறுவீர்களோ அதன்படி செய்கிறேன் என்றார் அவர்.


    திருச்செந்தூர் முருகனுக்கு தேர் இல்லை. இந்த புதையலை காட்டிக் கொடுத்தால், முருகனுக்கு தேரைச் செய்வாயா? என்றார்.


    கண்டிப்பாக செய்கிறேன்! ஐயா என்றார்.


    பின்பு, புதையல் இருக்கும் நொச்சிக் கொப்பை காட்டி உச்சி வேளையில் இந்த இடத்தைத் தோண்டிப் பார் புதையல் இருக்கும் என்று சொல்லிவிட்டு போய் விட்டார்.


    அவர் சொன்ன இடத்தை தோண்டிப் பார்த்தார். என்ன ஆச்சர்யம்!, ஒரு கடாரம் நிறைய சொக்கத் தங்கம் மின்னியது. இவரின் சொந்த ஊர் காயாமொழி ஆகும்.


    திருச்செந்தூர் கோயிலில் இன்றும் போத்திகள் தான் கோவில் குருக்களாக உள்ளனர்.


    திருச்செந்தூர் மூலவரான பாலசுப்பிரமணிய சுவாமியை தீண்டி பூஜை செய்பவர்கள் இந்த போத்திகள்தான்.


    இந்த போத்தியானவர்கள் மூலவரைத் தவிர வேறு எந்த சுவாமியிக்கும் பூஜை செய்யும் வழக்கம் கிடையாது.


    கோயிலுக்குள் இருக்கும் சண்முகர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு உண்டான பூஜையை சிவாச் சாரியார்கள்தான் செய்வார்கள்.


    இவர்களைத் தவிர்த்து கோயிலில் தேங்காய் பழம் உடைத்து அர்ச்சனை செப்வர்கள் திரிசுதந்திரர்கள் ஆவர்.


    இவர்கள் தான் கோயிலுக்குள் நடத்தப்படும் யாகசாலை பூஜையை செய்வார்கள்.


    கோயிலுக்கு வரும் பக்தர்களின் பரிகார பூஜையையும் சேர்த்தே இவர்கள் செய்கிறார்கள்.


    பதினெட்டாம் நூற்றாண்டில் திருச்செந்தூர் கோவிலுக்கு போக வர நாடார்களுக்கெல்லாம் அனுமதி இல்லாமல் இருந்தது.


    புதையலை கண்டெடுத்த அந்த நாடார், நிறைய பொருள் தந்து திருச்செந்தூர் தேரை செய்து கொடுத்தார்.


    இதனால் அதுவரை அவரை மிகவும் மரியாதையுடன் நடத்தி வந்தார்கள் போத்திகள்.


    ஒரு செயலைச் செய்யும் வரைக்கும்தான் அண்ணன் தம்பி. அதற்கப்புறம் நீ யாரோ? நான் யாரோ என்போவோ?, அதுபோல்தான்.......


    திருச்செந்தூர் முருகனுக்குத் தேரைச் செய்து கொடுத்த,
    காயமொழிக்காரர்களை, இனி கோயிலுக்குள் நுழையவிடமாட்டோம் என்று மிரட்டி விரட்டி விட்டார்கள் போத்திகள்.


    தேர் முழுமை வடிவம் பெற்று, இழுக்கத் தயாரான நிலையில் கம்பீரமாக நின்றது.


    ஆனால், இதை உருவாக்கிய காயாமொழிக்காரர்கள் எவரும் தேர் அருகில் இல்லை.


    தேர் வெள்ளோட்டம் விடவேண்டிய தினம், எவ்வளவோ முயற்சித்தும் தேர் நிலையிலிருந்து நகரவில்லை.


    அன்று சிதம்பரத்தில் தேர் நகர மறுத்து, சேந்தனாரின் புகழை வெளிக்கொணர, ஈசன் விளையாடினாரே, அதேபோல இங்கு முருகனும் காயாமொழிக்காரர்களுக்காக அருள் உள்ளம் புரியலானார்.


    போத்திகள் செய்வதறியாது தவித்தார்கள்.


    அன்றிரவு, தலைமை போத்தியின் கனவில் தோன்றிய முருகன், தேர் எப்படி நகரும்? தேரை முழுவதுமாக செம்மைப்படுத்தியவனை விரட்டி விட்டீர்களே!.


    காயாமொழி கிராமத்திலிருந்து எவராவது வந்து இந்தத் தேரைத் தொடாமல் தேர் நகராது என்று சொல்லி மறைந்தருளிப் போனார் முருகன்.


    மறுநாள் கொடுக்கட்டி, காயாமொழி ஆகிய கிராமத்திற்குச் சென்று அவர்களை அழைத்து வர போத்திகள் ஆளனுப்பினார்கள்.


    காயாமொழிக்குள் போத்திகளின் ஆட்கள் வருவதைப் பார்த்த அவர்கள்.... நம்மளை அடிக்கத்தான் போத்திகள் ஆள் அனுப்பியிருக்கிறார்கள் என்று பயந்துபோய் காயாமொழி கிராமத்தையே காலி செய்துவிட்டு வெளியேறலாயினர்.


    இப்படியே ஒரு வார காலம் கடந்து போனது. போத்திகள் எவ்வளவோ முயற்சித்தும் காயாமொழிக்காரர்கள் ஒருவரைக் கூட அழைத்துப்போக முடியவில்லை.


    என்ன செய்வதென்று ஆலோசித்த போத்திகள், தலைமை போத்தியிடம் சென்று மீண்டும் ஆலோசனை நடத்தினர்.


    காயாமொழிக்காரர்களின் ஒரு கைக்குழந்தையாவது இருந்தால் கூட போதும். அக்குழந்தையை கொண்டு நாம் தேரை நகர்த்தி விடலாம் அது இல்லாது வேறெதனாலயும் ஒன்றும் ஆகாது! இது முருகனின் எண்ணம் என்றார்.


    குழந்தைக்கு எங்கே போவது? என்று மீண்டும் காயாமொழிக்குப் தேடிப்போய் பார்த்தனர்.


    ஒரு தாய் தனது குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு வெளியே சென்றிருப்பது தெரிய வந்தது.


    உடனே, தொட்டிலில் கிடந்த அந்த குழந்தையை தூக்கி வந்து குளிப்பாட்டி, நகை போட்டு அலங்கரித்து தேர் வடத்தை தொடச் செய்தார்கள்.


    அவ்வளவுதான், தேர் தடங்கலில்லாமல் மிகச் சுலபமாக உருண்டது.


    அன்று முதல் இன்றுவரை ஆதித்தனாரின் குடும்பம் தொட்டுத்தான் தேர் இழுப்பர்.


    *(போத்திகளுக்கு திருச்செந்தூர் கோவிலில் உள்ள உரிமை பற்றி "உண்மையுடன் ஒரு வாழ்வு" என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது. இது உண்மை தானா என்று சந்தேகித்தால், இந்த நூல் உங்களுக்கு விளக்கும்.)*


    இந்நூல் முன்னமே உள்ளவை. இப்போது கிடைப்பது அரிதென நினைக்கிறோம். நூலின் படத்தை இத்துடன் இணைத்துள்ளோம்.


    முருகா சரணம்!
    சண்முகா சரணம்!!
    செந்திலாண்டவா சரணம்!!!


    திருச்சிற்றம்பலம்.
Working...
X