Announcement

Collapse
No announcement yet.

Dharmam - Positive story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Dharmam - Positive story

    தர்ம குணம் படைத்த மன்னன் போஜனிடம் விவசாயி ஒருவர், மகளின் திருமணத்திற்காக பணம் பெற எண்ணினார்.
    தலைநகருக்கு புறப்பட்டார்...


    வழியில் சாப்பிட ரொட்டி கட்டிக் கொண்டார். வழி நெடுக, கடவுளே! திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர் சம்மதிக்க வேண்டும், என வேண்டிக் கொண்டார். பசியெடுக்கவே, ஒரு குளக்கரையில் அமர்ந்து ரொட்டியைக் கையில் எடுத்தார்.


    மனதிற்குள், இந்தஉணவைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி, என்றார். அப்போது நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும், தோலுமாக வந்து நின்றது.


    இரக்கப்பட்ட அவர் ஒரு ரொட்டியை அதன் முன்வீசினார். ஒரே விழுங்காக உள்ளே தள்ளிய நாய், மீண்டும் ஆவலுடன் பார்த்தது.


    இரக்கப்பட்ட விவசாயி அத்தனை ரொட்டியையும் கொடுத்து விட்டார். ஒரு நாள் சாப்பிடா விட்டால் என்ன உயிரா போயிடும்?


    ராஜா அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால், பிரஜையான நாமும் முடிந்ததை செய்வது தானே முறை எனதனக்குள் சொல்லிக் கொண்டார். பசியைப் பொறுத்துக் கொண்டுதலைநகரை அடைந்தார்.


    அங்கிருந்த தர்மசத்திரத்தில் சாப்பிட்டார். பிறகு மன்னனைச் சந்தித்து, தான் வந்தவிஷயத்தை தெரிவித்தார்.


    போஜன் அவரிடம்,என்னிடம் தர்மம் கேட்டு வந்துள்ளீர்களே! நீங்கள்ஏதாவது தர்மம் செய்திருந்தால் சொல்லுங்கள். அதை நிறுக்கும் தராசு ஒன்று என்னிடம் இருக்கிறது.


    அது எந்த அளவு எடை காட்டுகிறதோ, அந்த அளவுக்கு தங்கம் வாங்கிக் கொள்ளுங்கள், என்றார் மன்னர்.


    தர்மம் செய்யுமளவு பணம் இருந்தால், நான் ஏன் உங்களிடம் வரப் போகிறேன்? வழியில் நாய் ஒன்றுக்கு உணவு அளித்தேன். அதற்கு ஈடாக, உங்கள் சத்திரத்தில் சாப்பிட்டு விட்டேன்.


    எனவே. நான் ஏதும் பெரிதாக தர்மம் செய்ததில்லை, என்று அடக்கமாகச் சொன்னார் விவசாயி.


    உங்கள் பசியைப் பொறுத்துக் கொண்டு நாய்க்கு உணவிட்டதும் புண்ணியமே என்ற போஜன் தராசைக் கையில் எடுத்தார்.


    .ஒரு தட்டில் விவசாயி செய்த தர்மத்தையும், மறுதட்டில் தங்கத்தையும் வைத்து நிறுத்தான்.


    கஜானாவில் இருந்த தங்கம் முழுவதும் வைத்தும் கூட தராசுத்தட்டு சமமாகவில்லை.


    வியந்தமன்னன்,உங்களைப் பார்த்தால் சாதாரணமானவராக தெரியவில்லை. என்னைச் சோதிக்க வந்திருக்கும் தாங்கள் யார்? என்றான்.


    மன்னா! நான் ஒருவிவசாயி. என்னைப்பற்றி சொல்லுமளவு வேறு ஏதுமில்லை, என்றார்பணிவுடன்.


    அப்போது தர்மதேவதை அங்கு தோன்றினாள். போஜனே! தராசில் நிறுத்துப் பார்ப்பது அல்ல தர்மம்.


    கொடுத்தவரின் மனமே அதன் அளவுகோல். இவர் மனம் மிகவும் பெரியது. அதனால், நீ எவ்வளவு பொன் வைத்தாலும் தராசு முள் அப்படியே தான் இருக்கும்.


    அவர் என்ன கேட்டு வந்துள்ளாரோ, அதைக் கொடுத்தால் போதுமானது, என்றாள். இதை ஏற்ற மன்னன், விவசாயிக்கு வேண்டிய அளவு தங்கம் கொடுத்து வழியனுப்பினான்.


    மகளின் திருமணம் சிறப்பாக நடந்தது.


    ஆத்மார்த்த மனதுடன் உன் கடமையை செய்.
    பலனை எதிர்பார்க்காதே.
    அதுவே நமது தர்மம்.
Working...
X