Announcement

Collapse
No announcement yet.

Tamarind tree branch breaks - Veerapandi pulavar - Spiritual Story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tamarind tree branch breaks - Veerapandi pulavar - Spiritual Story

    சிவாயநம திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    *இங்கே குறி!, அங்கே முறி!!.*💥
    மனம் முழுக்க குப்பையை சேர்த்து வைத்திருப்போம், நிறைஞ்ச மனசு என்போம்!,
    வீடு முழுக்க அழுகுபடுத்தி செலவழித்து வைத்திருப்போம், இறைவன் கொடுத்தது என்போம்!,
    வருத்தங்களை சுருட்டி உள் வைத்திருப்போம், போலியாக ஒன்றுமில என்போம்!,


    வசவுகளை வாங்கி சேர்த்து வைத்திருப்போம், பழி சொல்கிறார் என்போம்!,


    பொறாமைகளை மூட்டை மூட்டையாக வைத்திருப்போம், காரணம் விதியை நோகுவோம்!,


    சந்தேகங்களோடு கூட்டு வைத்திருப்போம், பந்தத்தை தொலைத்தழுவோம்!,


    அறியாமையை கட்டியழுது, தெரியாம என மழுப்புவோம்!,


    வெறுப்புகளை சுமந்து கொண்டு, மனிதநேயம் பேசுவோம்!,


    ஆர்ப்பாட்ட போராட்டம் காட்டி, சாதனை என்போம்!,


    அலப்பறைகளை அணிந்து கொண்டு, அழகென காட்டுவோம்!,


    பணத்தை பல கணக்குகளில் வைத்திருப்போம், போலியான சந்தோஷம் காண்போம்!.


    இவையெல்லாம் மனித வாழ்வில் சர்வம்.


    இத்தனைக்குள்ளுமிருந்து நம்மை மயக்குபவன் அந்த ஆணவத்தின் அதிகாரம்தான்.


    இந்த ஆணவம் ஒழிந்த மனந்தான், நிம்மதியை சுகமாக சுமந்து கொண்டிருக்கும்.


    இதற்காகத்தான் ஒவ்வொரு ஆலயத்திற்குள்ளும் செல்லும்போது, பலிபீடத்தருகே நின்று ஆணவம் ஒழிய வேண்டிக் கொள்கிறோம்.


    வேண்டுதலை கோயிலோடு முடித்துக் கொள்கிறோம். ஆலயப்படியை விட்டு வெளிவந்ததும், மீண்டும் ஆணவமே நம்மை ஆட்சி செய்கிறது.


    ஆணவத்தை அகற்றி வாழ்ந்தால், ஆவனம் நிறைந்து சுத்தமாக வாழலாம்.


    தூத்துக்குடியில் வீரபாண்டிய புலவர் என்றொரு புலவர் இருந்தார்.


    இவர் சிறு வயது முதலே கல்வி வேள்விகளில் ஈடுபட்டு சிறந்து விளங்கி வந்தார்.


    மகான் ஒருவரிடம் ஆறெழுத்து மந்திரத்தை முறைப்படி உபதேசம் பெற்று உருவேற்றி வந்தார்.


    இதனால், இவர் நாவில் அருந்தமிழ் பாக்களும், சரளமாக தவழ்ந்து வந்தது.


    கூடவே முருகப்பெருமானின் அருளும் இவருக்கு இருக்க, இவர் என்ன சொன்னாலும் அப்படியே பலித்து வந்தது.


    இந்தச் சமயத்தில் தூத்துக்குடியில் தலைமை அதிகாரியாக ஒருவர் செயல்பட்டு வந்தார்.


    இவர் துருக்கிய நாட்டைச் சார்ந்தவர். இவருக்கு தற்பெருமையும் ஆணவமும் நிறையவே இருந்தது.


    இவர் பெயரைக் கூறினாலே, அனைவரும் பயந்து நடுங்குவர்.


    ஒரு நாள் இவர் ஆத்தூருக்கு வந்து புளியமர நிழலின் கீழ் கூடாரம் அடித்து தங்கினார்.


    இந்தச் சமயத்தில், கூடாரம் இருந்த வழியாக, வீரபாண்டிய புலவர் சென்றார்.


    புலவருக்கு என்ன தோன்றியதோ? தெரிவில்லை!, விறுவிறுவென கூடாரத்தினுள் நுழைந்து அங்கிருந்த ஆசனத்தின் மீது அமர்ந்தார்.


    இதை சற்றும் எதிபாராத அந்த துருக்கிய அதிகாரி, யார்? நீங்கள்!, என் அனுமதியின்றி எப்படி உள்ளே வரலாம்? என கேள்வி கேட்டார்.


    யாம் முருகப்பெருமானின் அருளைப் பெற்றிருப்பவன். இந்த வழியாக வந்தபோது, இதனுள் நுழைந்து அமர வேண்டும் என்று தோன்றியது. ஆதலால் இவ்விடம் அமர்ந்து கொண்டோம் என்றார்.


    புலவர் இவ்விதம் கூறியதும், அதிகாரிக்கு மேலும் கோபம் எகிறியது. கண்கள் சிவக்க சிணந்து......


    நீர் தெய்வத்தின் அருளைப் பெற்றவர் என்பதை நாம் நம்பவேண்டும் என்றால், உமது புலமையை வைத்து இங்கு ஏதாவது ஒன்றை நிகழ்த்தி காட்ட வேண்டும் என்றார்.


    அதையும் தாங்களே கூறிவிடுங்கள் என்றார் புலவர்.


    இதோ! இந்த கூடாரத்திற்கு மேலாக வளைந்து வளர்ந்திருக்கும் புளியங் கிளையை, உமது புலமையால்பாடி, கிளை முறியச் செய்யுங்கள் பார்க்கலாம் என்றார்.


    அப்படி பாடி, கிளை முறிந்தால் என்ன தருவீர்கள் என்றார் புலவர்.


    அப்படி நடந்தால், உம்மையும் வணங்குவேன், நீர் வணங்கும் முருகப் பெருமானையும் வணங்கத் துணிவோம், என் ஆணவத்தை ஒழித்து மக்கள் மீது நல் ஒழுகுவோம் என்றார் அவர்.


    அப்படி எதுவும் நடக்கவில்லையென்றால் நான் தரும் தண்டனை மிகவும் மோசமானதாக இருக்கும் என்றும் கறாராக கூறினார்.


    அதிகாரியின் கர்ஜனையில் கூடாரத்தைச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தோர் அனைவரும் பயந்து நடுங்கினர்.


    பன்னிருகையானின் பேருளைப் பெற்றிருந்த புலவரோ, அவ்வதிகாரியைப் பார்த்து, புளியமரக்கிளையில், நீரே விரும்பும் இடத்தில் சுண்ணாம்புக் கலவையால் ஒரு குறியை இடவும். அந்தக் குறி இருக்கும் இடத்திலேயே கிளை முறிய பாடுகிறேன் என்றார்.


    கிளை முறிவதுதானே வழக்கு. இதில் குறி எதற்கு என்றார் அதிகாரி.


    குறியை, நீர் குறிக்கவில்லையென்றால், என் மீது வீண்பழியை நீர் சொல்வீர், ஆதலால் குறியை நீரே குறித்து அடையாளமிடச் சொன்னேன் என்றார்.


    பின், தன் பணியாளனை அழைத்து, சுண்ணாம்பு பாகுவினால், புளியமரக் கிளையில், தான் கூறச் சொன்ன இடத்தில் அடையாளக் குறியை வரைந்தார்.


    புலவர், முருகப் பெருமானை நினைந்துருகி ஒரு வெண்பாவைப் பாடினார்.


    அவ்வளவுதான், சுண்ணாம்புக்குறி அடையாளமிட்ட இடத்திற்கு மேலோ கீழோ இல்லாமல், குறிக்கோடு சகிதம் புளிய மரக்கிளை முறிந்து பொத்தென கீழே வீழ்ந்தன.


    இதைக்கண்டதும் முதன்முதலாக அந்த அதிகாரி பயந்து நடுங்கினார். புலவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். எனக்கு எந்தத் தண்டணையும் கொடுத்து விடாதீர்கள். இப்பொழுது முதல் என் ஆணவத்தை ஒழித்து விடுகிறேன் என்றார்.


    எம்மால் தீங்கொன்றும் உமக்கு இல்லை என்று புலவர் கூறியதும்....


    விலைமதிப்பற்ற தன் ஆபரணங்களை, புலவரிடம் அன்போடு கொடுத்தார்.


    அதை புலவர் வாங்க மறுத்து, எனக்கு வேண்டியதைத் தர என் செவ்வேள் முருகப்பெருமான் இருக்கிறார். நீர் இதையெல்லாம் அந்த முருகப் பெருமானிடமே சேர்த்து விடும் என்றார்.


    இதனால், ஆணவம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது என்பதை உணரத் தெரிகிறோம்.


    ஆணவம் அழிந்த அதிகாரி, வெகுமதிகளை அளிக்க மனப் பக்குவம் கொள்கிறார்.


    நம்மிடம் இருக்கும் எல்லாமே, நாமே உழைத்ததாயினும், அவையெல்லாம் அது அவனருளாலே விளைந்ததாகும்.


    இது சரி என்போர்க்கு ஆணவம் துளியுமில்லை. மறுப்போர்க்கு இன்னொரு வீரபாண்டிய புலவரை, அந்த ஈசனோ முருகனோதான் அனுப்பி வைக்க வேண்டும்.


    இன்றைய கலியில், தற்போதைய காலங்களில் சிவ வழிபாடு, வெளிப்பாடு அதிகப்பட்டுக் கொண்டிருக்கிறது.


    இது எல்லோருக்கும் தெரியும்.


    நாமும் நமக்குள் இருக்கும் ஆணவத்தை அழித்து நிம்மதிகளை சுமக்க முயல்வோமாக!
Working...
X