சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு. கருப்பசாமி.*
🍁 *நாளை ஒரு நாள் மட்டும்:*🍁
வேதியர்களில் சிவசர்மா என்னும் பெயருடான வேதியர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
இவர் உபநிடதங்களை கரைத்து பருகியிருந்தார்.
யாருக்கேனும் உபநிடதங்களில் எழும் சந்தேகங்களை கேட்போர்க்கெல்லாம், அதனை விரித்துரைத்து சந்தேகங்களை தீர்த்து வைப்பார் இந்த சிவசர்மா.
ஒரு ஸ்லோகத்தில் பொருளைப் பற்றி கேட்டால், அதனைப் பற்றி விளக்கம் இவரிடமிருந்து தெளிவாக வந்து சேரும்.
நாளடைவில், உபநிடதங்களில் சந்தேகத்தை கேட்டு வருவோர்கள், வேதப் பொருளின் விளக்கத்தின் மீது, வீண் வாதம் செய்து சிவசர்மாவின் மனதை புண்படுத்தினார்கள்.
வேதப் பொருளை அலட்சியமாக பாவிக்கும், இவர்களுக்கு, நாம் உரைக்கும் பொருள் நல்லதாகா!' எனவே இவர்களுக்கு இனி பொருளுரைப்பதை விட்டுவிட்டு, நாம் நீங்கிப் போய்விட வேண்டும் என முடிவு செய்தார்.
இதனால் மனசஞ்சலத்திலிருந்த வேதசர்மா அகத்தியரைக் கண்டு தரிசித்தால் மன அமைதி அடையும் என புறப்பட்டார்.
தன்னிடமிருந்த பொருளைகளை யாவும் பொன்களாக மாற்றியெடுத்து வைத்துக் கொண்டார்.
அகத்தியரை எங்கே காண்பது?, இப்போது எங்கு போனால் அவரைக் காணமுடியும்?, என்று ஊர்ஊராய் செல்லுகையில், வழியில் உள்ள சிவத்தலங்களைத் தரிசித்தபடியே சென்றார்.
அப்போது தாமிரபரணி ஆற்றோட்டத்திற்கருகில் அமையப்பெற்றிருந்த, காசியபர் முனிவர் வணங்கிய சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.
இக்கோயிலிருந்த அர்ச்சகரிடம் சிறிது நேரம் அளவாடிக் கொண்டிருந்தபோது இரவாகி விட்டது.
தங்களின் யாத்திரை பயணம் நல்லவிதமாக அமைய வாழ்த்திய அர்ச்சகர், அடியேன் குடிலில் இரவு ஓய்வெடுத்துக் கொண்டு, காலையில் பயணிக்குமாறு அர்ச்சகர் வேண்டினார்.
இதற்குச் சம்மதித்த சிவசர்மா அர்ச்சகர் குடிலில் இரவை கழித்துவிட்டு, காலையில் புறப்பட முனைந்தபோது அர்ச்சகரிடம்,...........
இந்த பொன்னை நான் கையில் எடுத்துக் கொண்டு போக விருப்பமில்லை. இது இப்போது உங்களிடமே இருக்கட்டும். திரும்பி வரும்பொழுது இதை பெற்றுச் செல்கிறேன் என்று கூறிக் கொடுத்துவிட்டு, பொதிகை மலைக்கு பயணமானார்.
மலைகளை கடந்து தேடியலைந்தார். குறுகிய பாறைகளுக்கிடையிலும், குகைகளிலும், அகத்தியப் பெருமானைக் கண்டு கண்டு தேடியலைந்தார்.
நாளும், பொழுதும் நீங்கியதே தவிர அகத்தியரை தரிசிக்கும் நிலை உருவாகவில்லை.
பலநாள் மலையேற்ற பிரயாணத்தால் உடல் தளர்ச்சி அடைந்தார். கால்கள் வலியை ஏற்படுத்தின.
கால்களை எட்டெடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் வலித்தபோது,... பாவியேன் நான், எத்தனை வலி வரிணும் நான் அகத்தியரைக் காணாது திரும்புவதில்லை என்று, தன் மனதுக்கு தானே கூறிக் கொண்டார்.
ஓரிடத்தில் வந்து நின்ற அவர், இதற்கு மேலும் பயணத்திற்கு கால்கள் ஒத்துழைக்காததால், அங்கு நின்றபடியே வானினை நோக்கி, அகத்திய பெருமானே!, அகத்திய பெருமானே!!, என கத்திக் கத்திக் கதறினார்.
அப்போது அவருக்கு முன்வந்து நின்றார் துறவியொருவர், ...........
ஏன்?, எதற்காக இப்படி கத்துகிறீர்? என வினவினார்.
தமிழ்முனி அகத்தியரைத் தரிசிக்க வந்தேன் அவர் காணக் கிடைக்காததால் கத்தியழைக்கிறேன் என்றார் சிவசர்மா.
'வீண் எண்ணம் இது!' உம்மால் அவரைக் காணமுடியாது!, எனவே வந்த வழியே திரும்பிச் செல்லுங்கள் என்றார் அந்த துறவி.
அடியேன் செத்து மடிந்தாலும் பரவாயில்லை. ஆனால் அகத்தியரைக் காணப்பெறாமல் கீழிறங்குவதில்லை என்றார்.
அன்று நாவுக்கரசர் சொன்னாரே!, கயிலைநாதனை காணப்பெறாது திரும்புலேன் என்று அதுபோல சிவசர்மாவும் கூறினார்.
உடனே, சிவசர்மா வியந்த வண்ணம், துறவியாயிருந்தவர் அகத்தியராக மாறி காட்சி தந்ததுடன்....
இதோ இந்த பொய்கையில் மூழ்கு!, எனச் சொன்னதுடன் சிவசர்மாவின் தலையை பிடித்து நீருக்குள் அமிழ்த்தினார் அகத்தியர்.
சிவசர்மா மூழ்கியெழுந்தபோது, முதுமை நீங்கி, பதினாறு வயதுடையோனைப் போல உடல் பொழிவைப் பெற்றெழுந்தார்.
சிவ புண்ணியம் நிறையப் பெற்ற உனக்கு, சிவகதி கிடைக்கட்டும்! என ஆசி கூறி மறைந்து போனார்.
இதன் பின்பு மலையை விட்டிறங்கி, அர்ச்சகர் குடிலுக்கு வந்தார்.
தனக்கு அகத்தியர் காணக் கிடைத்த நிகழ்வை அர்ச்சகரிடம் விளக்கி விட்டு தன்னுடைய பொன்பொருளைத் தருமாறு கேட்டார்.
அர்ச்சகர்க்கு, வந்திருந்திருப்பவர் மேல் சந்தேகம் வந்து விட்டது.
இவர்தான் சிவசர்மாவா?, இல்லை சிவசர்மாதான் இப்படியாக மாறி இருக்கிறாரா? எனக் குழப்பம் உண்டானார்.
உம் நிகழ்வை கேட்டதாலும், உம் உருவத் தோற்றத்தை இதற்கு முன் நான் பார்க்கப் பெறாததாலும், எனக்கு என்ன செய்வன என தெரியாது இருக்கிறேன் என்ற அர்ச்சகர்......
வேனுமானால், நாளை நான் அர்ச்சனை செய்யும் கருவறைக்கு வந்து நான் சத்தியம் செய்தால் பொன்பொருளைத் தரட்டுமா? என்றார்.
சரி! நாளை வருகிறேன் என சிவசர்மா புறப்பட்டுப் போனார்.
அர்ச்சகர் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் திகைத்தார். ஏனெனில் சிவசர்மா அர்ச்சகர் குடிலில் தங்கி போன பிறகு, அவர் எண்ணம் வேறு விதமாக இருந்தது.
வறுமையில் இருக்கும் தனக்கு இந்த பொன் மிகவும் அவசியமானது. இந்த பொன்னைக் கொண்டு, தன் பென்னிற்கு நல்ல காரியங்களைச் செய்து விடலாம் என கணக்கு போட்டு விட்டிருந்தார் அர்ச்சகர்.
இந்த பொன்னை அபகரித்துவிட வேண்டும் என்ற எண்ணமே, அர்ச்சகரிடம் மேலோங்கி இருந்ததால், ஒரு நல்ல தந்திரத்தை கையாள வேண்டும் என நினைத்தார்.
வழக்கம்போல் சுவாமி சந்நிதியை நடைசாத்தும் போது...., மந்திர கிரிகைகளை பிரயோகம் செய்து, சுவாமியை, நாளை ஒரு நாள் மட்டும் வெளியே இருக்கும் மரத்தில் நிலைபெறும்படி செய்து விட்டார்.
சிவனையும் பார்த்து....நான் ஆணையிட்டு உன்னைத் திரும்ப அழைக்கும் வரை, நீ இந்த கருவறைக்கு வராமல், மரத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு குடிலுக்கு திரும்பி விட்டார்.
ஈசன் சும்மா இருப்பாரா? அன்று இரவு சிவசர்மாவின் கனவில் தோன்றினார்......
சிவசர்மா!, கோயில் அர்ச்சகர் என்னை கருவறையிலிருந்து விலக்கி, வெளியே உள்ள மரத்தில் ஆவாகனம் செய்து விட்டான், எனவே நாளை நீ இதற்குத் தகுந்தபடி முனைப்பெடுத்துக் கொள்ளவும் எனக் கூறி மறைந்தருளிப் போனார்.
கனவு சிவசர்மாவின் தூக்கத்தை விரட்டிவிட, அப்போது முதல் ஐந்தெழுத்து மந்திரத்தை விடாது ஜபித்துக் கொண்டேயிருந்தார்.
மறுநாள் காலை அர்ச்சகரைப் பார்க்க வந்த சிவசர்மா,...அர்ச்சகரே! ஈசன் திருமேனி முன்பு சத்தியம் செய்வது எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை. ஆதலால், வெளியே இருக்கும் மரத்திற்கு முன் வந்து சத்தியம் செய் என்றார்.
திடீரென்று, சந்நிதியை விட்டுவிட்டு, வெளியே இருக்கும் மரத்தின் முன்பு சத்தியம் செய்யச் சொல்கிறாரே என்று அர்ச்சகர் திகைத்தார்.
இருந்தாலும் அர்ச்சகர் மனதிற்குள் இருந்த எண்ணம் வலுத்தது,....நாமதானே மந்திரம் செய்து ஈசனை மரத்தில் இருக்கச் செய்தோமே. இதனால் நமக்கு ஒன்றும் நேர்ந்து விடாது என மனதை திடப்படுத்திக் கொண்டு மரத்தின் முன் வந்தார் அர்ச்சகர்.
அவ்வளவுதான்...மரம் தீப்பிழம்பானது. இதில் அர்ச்சகரின் உடல் பஸ்பமானது.
தீப்பிழம்பு தோன்றிய இடத்தில் லிங்கத் திருமேனி கிளைத்தெழுந்து பிரகாசித்தது.
சிவனருட் செயலைக் கண்டு சிவசர்மா பரவசம் அடைந்தார்.
இந்த இடத்தில் ஈசன், எரித்து ஆட்கொண்ட இடமாதலால், ஈசன் எரிச்சாளுடையாரானார்.
அர்ச்சகரின் உறவினோர்கள் நடந்ததைச் கேள்விப்பட்டு, அர்ச்சகர் குடிலிலிருந்த பொன்பொருளை எடுத்துக் கொண்டு வந்து சிவசர்மாவிடம் சேர்த்தனர்.
இப்பொன்பொருளைப் பெற்றுக் கொண்ட சிவசர்மா, எரிச்சாளுடையார்க்கு ஆலயம் எழுப்பிவித்தார்.
இத்தலக் கோயில்,, திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் சாலையில், அம்பாசமுத்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.
ஒருத்தருடையதை, ஒருத்தர் அபகரிக்க நினைப்பதே தவறு.
அதுவும், அந்த தவறுகளுக்கு ஈசனையும் இணங்குதலாக இருக்க மனம் நினைப்பது பெரிய பாவத்தை தேடிக் கொள்வதாகும்.
இப்படித்தான் அர்ச்சகரின் வாழ்வில் நடந்துவிட்டது.
கெடுவன எண்ணங்களுக்கு ஈசன் துணை ஒருநாளும் கிடைக்காது.
நல்வன நினைத்தாலே போதும், அது நடவாது போனாலும் ஈசன் பிரவாகம் கண்டிப்பாக நம்மை வந்து சேரும்.
நாம நல்வனையே நினைப்போம். நல்ல தொண்டு ஒன்றை செய்ய முனைவோம்.