நெய் விளக்கு ஏற்றினால்...
மதுரை நகரில் உள்ள திருவாப்புடையார் திருக்கோயில் இறைவனுக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்தால் 1000 பசு தானம் செய்த பலனும், இளநீர் அபிஷேகம் செய்தால் 100 அஸ்வமேத யாகம் செய்த பலனும் உண்டாகும் எனத் கலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
-- கே.வி. சீனிவாசன், திருச்சி.
பெருமாளின் எட்டு சயனக் கோலங்கள்!
1. யோக சயனம் -- தில்லை, திருச்சித்திரக் கூடம்.
2. தர்ப்ப சயனம் -- திருப்புல்லாணி.
3. புஜங்க சயனம் -- திருவரங்கம் திருஎவ்வுன் ( திருவள்ளூர் ).
4. தல சயனம் -- திருக்கடல்மல்லை ( மகாபலிபுரம் ).
5. வடபத்ர சயனம் -- திருவில்லிபுத்தூர்.
6. உத்தான சயனம் -- கும்பகோணம்.
7. வீர சயனம் -- திரு இந்தளூர் ( மயிலாடுதுறை ).
8. மாணிக்க சயனம் -- திருநீர்மலை.
-- வீர.செல்வம், பந்தநல்லூர்.
--- குமுதம் பக்தி ஸ்பெஷல். டிசம்பர் 16-- 31, 2013.