Announcement

Collapse
No announcement yet.

வலிமையான லேப்டாப்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வலிமையான லேப்டாப்!

    வலிமையான லேப்டாப்!


    கம்ப்யூட்டர், செல்போன், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளுக்கு அதிகபட்ச உத்தரவாதம் யாரும் தர முடியாது. இருந்தாலும் நிறுவனங்கள் அதிகபட்சம் ஓராண்டு உத்தரவாதம் அளிக்கின்றன. கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டெல் நிறுவனம் மிகவும் வலிமையான லேப்டாப்பை உருவாக்கியுள்ளது.


    எத்தகைய சூழலிலும் செயல்படக்கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. தொடர் மழை, பாலைவனப் புழுதி போன்ற சூழலிலும் இது பாதிக்கப்படாமல் செயல்படும். நீர் புகா வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல தூசி உள்ளிட்டவற்றாலும் பாதிக்கப்படாது.


    எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றுவோர் மற்றும் சுரங்கங்களில் பணி புரிவோருக்கு ஏற்றதாக இது இருக்குமாம். ராணுவத்தினருக்கு மிகவும் ஏற்றது.


    இதன் வலிமையை தாங்கும் திறனை சோதிக்க இதன் மீது ஒருவர் ஏறி நின்று விளம்பரப்படுத்தியுள்ளார். இதன் விலை ரூ. 2.39 லட்சம் முதல்.
    60 கிலோ எடையைத் தாங்கும் என்பதால் இதன்மீது 60 கிலோ எடைக்கல்லை தூக்கிப் போட்டு இதன் தாங்கும் திறனை சோதித்துப் பார்க்கக் கூடாது. கடினமான சூழலிலும் இது செயலாற்றும் என்பதை இந்நிறுவனம் நிரூபித்துள்ளது.
    -- தொழில் நுட்பம். வணிக வீதி.
    -- 'தி இந்து' நாளிதழ். இணைப்பு. திங்கள், டிசம்பர் 15,2014.
Working...
X