Announcement

Collapse
No announcement yet.

Life - Positive story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Life - Positive story

    *இன்றைய கதை*




    ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.அப்போது
    செருப்பு பிஞ்சுபோச்சு.. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டுக்காரரை அழைத்து...


    ஐயா இந்தமாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு. புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்... காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.
    அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து...
    ஐயா.. " நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான். நீங்க தாராளமா வெச்சிட்டுப்போங்க" என்று சொன்னார்.


    சில ஆண்டுகள் கடந்தன...
    ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார். அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது. அப்போது நல்ல மழை. பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...


    ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.


    அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..


    ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க" என்று..




    அவ்வளவுதான்க வாழ்க்கை
    ஒரு செருப்புக்கு கிடைக்குற மறியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்...


    (உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்கு மறியாதை)
Working...
X