Announcement

Collapse
No announcement yet.

You are sad because you allow yourself so..

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • You are sad because you allow yourself so..

    courtesy:Sri.JK.Sivan


    ''1. முழுக்கடல் நீரும் ஒரு கப்பலை மூழ்கடிக்காமல் கப்பலில் நுழைந்த நீர் மட்டும் அதை முழுக வைப்பது போல் வாழ்க்கையின் அழுத்தங்கள் நம்மை ஒன்றும் செய்யாது.. எதை உள்ளே அனுமதிக்கிறாயோ அதுவே உன்னை தின்று விடும். ''
    ++
    2. கலங்கரை விளக்கு உச்சியில் விளக்கு போடுவது ஒருவனுக்கு வேலை. இருட்டாகிவிட்டது. அவன் லைட் ஹவுஸ் படிகளில் ஏறினான். கையில் ஒரு மெழுகு வத்தி. அது பேசியது.
    ''எங்கே போகிறோம்?''
    ''லைட் ஹவுஸ் உச்சிக்கு. கடலில் கப்பல்களுக்கு அடையாளம் அறிவிப்பு காட்ட விளக்கு ஏற்றவேண்டாமா?
    ''என்ன உளறுகிறாய். என் இந்த சிறிய ஒளி எவ்வாறு தூரத்தில் கடலில் கப்பல்களுக்கு தெரியும்?''
    "பேசாமல் வா. உன் ஒளி சிறிதானால் என்ன. பேசாமல் அணையாமல் எரிந்து கொண்டே வா. அது போதும்.''
    உச்சியில் ஒரு பெரிய விளக்கு. அசுர திரியோடு. அதை கையிலிருந்த மெழுகு வர்த்தி ஒளியால் ஏற்றினான். கலங்கரை விளக்கு தீபம் சுடர் விட்டு பெரிதாக வெகு தூரம் தெரியும்படி எரிந்தது.
    நமது குறிப்பிட்ட அளவு அறிவை வைத்து உலகை எடைபோடுகிறோமே, கடவுளின் எல்லையற்ற அளவை நினைக்கிறோமா? அவர் எங்கே. நாம் எங்கே. நமக்கான சிறு கடமையை செய்வதை மட்டும் தான் எதிர் பார்க்கிறார். அதை ஒழுங்காய் செய்தால் அவர் சக்தியை அறிய வாய்ப்பு உண்டு. நாம் சிறியவர்கள். சரணாகதி அடைந்தால் போதும். அவரை அடையலாம்.''
Working...
X