Announcement

Collapse
No announcement yet.

மழை நீர்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மழை நீர்

    மழை நீர்
    மனித உடலில் பெரும்பகுதி நீராலானது. தாவர உடலிலும் 90 விழுக்காடு அளவுக்கு நீர் நிறைந்துள்ளது. வளர்ந்த ஜெல்லிமீன் போன்றவற்றின் உடலில் 96 விழுக்காடு வரையும் நீர்தான். இது நீரின்றி உயிரில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. உயிர்வாழ்வுக்கும் புறத்தூய்மைக்கும் நீர் அவசியம். இவ்வுலகு நீரால் சூழப்பட்டது எனினும் நாம் பயன்படுத்தத்தக்க நந்னீரின் அளவு நாளுக்குநாள் குறைந்துகொண்டே செல்கிறது.
    மழையைச் சிறுமழை என்றும் பெருமழை என்றும் பிரித்தறிந்து செயல்பட த் தகுந்த அளவுகோல்கள் அன்று இருந்தன. நெல் குத்த உதவும் உரலே கிராமத்து மழைமானி ஆகும். உரல் நிறைந்த மழை ஓர் அங்குல மழைக்குச் சமம் என்பர். நிலத்தில் கலப்பையின் கொழுமுனை மண்ணில் இறங்கத்தக்க அளவைவிடக் கூடுதல் மழையெனில் அது மாமழை எனப்பட்டது.
    -- கண்ணன் ஸ்ரீஹரி.
    -- பச்சை பூமி. ஆகஸ்ட் - 2014.
    -- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.
    Posted by க. சந்தானம்
Working...
X