Announcement

Collapse
No announcement yet.

"தேசப்பற்று"

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • "தேசப்பற்று"

    "தேசப்பற்று"
    "தேசப்பற்று என்பதன் எல்லை என்ன?"
    "பகத் சிங்கை, ஆங்கிலேயர்கள் தூக்கிலிடத் தீர்மானித்து, தூக்கு மேடை முன்பு அவரை நிறுத்தினர். 'தூக்கில் இடுவதற்கு முன்பு ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம்' என்று அனுமதி கொடுத்தனர். தான் இறப்பது குறித்து துளியும் வருந்தாத பகத் சிங், தன்னை ஒரு குற்றவாளியாகக் கருதி தூக்கில் போடுவதை மட்டும் விரும்பவில்லை. 'என்னை எதிரியாகக் கருதி சுட்டுவிடுங்கள். இதுதான் என் இறுதி ஆசை' என்றார்.
    'நீ எப்படியும் இறக்கத்தான் போகிறாய். உன்னை எப்படிக் கொன்றால் என்ன?' என்று ஆங்கிலேய அதிகாரிகள் அலட்சியமாகக் கேட்டனர்.
    அதற்கு பகத் சிங், 'தூக்கிலிடும்போது என் கால்கள் என்னுடைய தாய் மண்ணைத் தொட முடியாத உயரத்தில் இருக்கும். ஆனால், துப்பாக்கியால் சுடும்போது என்னுடைய தாய் மண்ணைத் தழுவியபடியே உயிர் விடுவேன். அதுவே எனக்கு மகிழ்ச்சி' என்றார். பற்று என்றால் இது பற்று".
    -- கங்கை பிரபாகரன், சென்னை.
    -- ( நானே கேள்வி ... நானே பதில் ! ) பகுதியில்...
    -- ஆனந்த விகடன் 18- 06- 2014.
    Posted by க. சந்தானம்
Working...
X